திமுக, அதிமுகவை பின்னுக்கு தள்ளி விஜய் தனித்த சக்தியாக வர வாய்ப்பில்லை என திருமாவளவன் கூறியுள்ளார். இதுகுறித்து முகநூல் நேரடி ஒளிபரப்பில் பேசிய அவர், திமுக, அதிமுக எதிர்ப்பு வாக்குகள் தமிழக அரசியலில் எப்போதும் உள்ளன. அந்த வாக்குகளை மட்டுமே விஜய் பெருவாரியாக பெறுவார் என்றார். இதனால் இத்தேர்தலில் திமுகவே வெல்லும், விஜய் ஆட்சியமைக்க வாய்ப்பில்லை என்றும் அவர் பேசியுள்ளார்.

இந்த முறை திமுக எதிர்ப்பு வாக்குகளை அதிமுக, தவெக, நாதக மூவரும் அவரவர் சக்திக்கு ஏற்ப பிரித்து கொள்வார்கள். அதே நேரம் விஜய் ஆட்சி அமைப்பதற்கும், தனித்த சக்தியாக உருவெடுப்பதற்கு வாய்ப்பு இல்லை எனவும் திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அவருடைய இந்த கருத்து தற்போது அரசியல் களத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

விஜய்யின் அரசியலை ஆரம்பம் முதலே திருமாவளவன் கடுமையாக விமர்சித்து வருகிறார். திமுக எதிர்ப்பு என்பதை மட்டுமே பிரதானமாக கொண்டு அவர் அரசியல் செய்வதாகவும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதை நோக்கமாக கொண்ட விஜய், அந்த இடத்தில் யாரை உட்கார வைக்க நினைக்கிறார். அவரால் இந்த தேர்தலில் ஜெயிக்க முடியாது என்பது தெரியும்.

திமுகவை தோற்கடித்து விட்டு அந்த இடத்தில் பாஜக, அதிமுக கூட்டணியை கொண்டு வர முயற்சிக்கிறார். கிறிஸ்தவர்கள் வாக்குகள் திமுக கூட்டணிக்கு செல்லக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு களமிறக்கப்பட்டு இருப்பவர் விஜய் என்ற விமர்சனங்களையும் திருமாவளவன் முன்வைத்து வந்தார். இந்நிலையில் தற்போது தேர்தலில் முடிந்ததை தொடர்ந்து விஜய்யால் ஆட்சி அமைக்க முடியாது என திட்டவட்டமாக அவர் பேசியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version