தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு ஒதுக்கீடு வேட்பாளர் அறிவிப்பு, பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். தவெக கட்சி தரப்பில் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் இறுதிசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் உள்ள எம்.கே.பி நகர் பேருந்து நிறுத்தம் அருகே நாளை (மார்ச் 28) பிரச்சாரம் மேற்கொள்ளவும் திட்டமிட்டிருந்தார்.
இந்த நிலையில் விஜயின் பெரம்பூர் தேர்தல் பிரச்சாரத்திற்கு தேர்தல் அலுவலர் அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தவெக தேர்வு செய்த இடம் நெருக்கடியான இடம் என்பதால் பிரசாரம் நடத்த அனுமதி மறுத்துள்ளது என்று கூறியுள்ள காவல்துறை அதிகாரிகள் பிரச்சாரத்திற்கு மாற்று இடம் கேட்டு விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்
இதனை தொடர்ந்து கட்சியினருடன் ஆலோசனை செய்து சென்னை தலைமைச் செயலகத்தில் சென்று முறையிட உள்ளதாக தவெகவின் பெரம்பூர் செயலாளர் சிவா தெரிவித்துள்ளார்.
