கோவை மாவட்டத்தில் பெய்து வரும் பருவமழையால் நொய்யலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க தலைமை நிலையச் செயலாளருமான எஸ்.பி. வேலுமணி, தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தென்னமநல்லூரில் நொய்யலாற்றில் பொங்கி வரும் தண்ணீரை மலர் தூவி வரவேற்றார்.

மேலும், பேரூர் படித்துறை, சித்திரை சாவடி தடுப்பணை, காளவாய் தடுப்பணை ஆகிய இடங்களிலும் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், இந்தப் பகுதிகளையும் அவர் ஆய்வு செய்தார். ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர் அறிவுறுத்தினார். இந்த நிகழ்வின்போது அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version