சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை அலுவலகத்தில் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் அவசர கூட்டம் நடைபெற்றது.

அவசர செயற்குழு கூட்டம் என்பதால் சில நிர்வாகிகள் மட்டுமே நேரில் கலந்து கொண்ட நிலையில், சில நிர்வாகிகள் காணொலி காட்சி வாயிலாக கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக உடன் கூட்டணியின் போது மநீம கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் சீட் கொடுப்பதாக திமுக உறுதி அளித்திருந்தது. தற்போது நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் திமுகவுக்கு நான்கு இடங்கள் உள்ளது.

திமுக சார்பில் இந்த தேர்தலில் மநீம கட்சிக்கு சீட் கொடுத்தால் கட்சி சார்பாக நிற்கும் வேட்பாளர் தொடர்பாக நிர்வாக குழு கூடி முடிவெடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்ட நிலையில்,

மக்கள் நீதி மையம் கட்சியின் நிர்வாக குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் வேட்பாளர் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக உடனான ஒப்பந்தத்தின்படி, மக்கள் நீதி மையம் கட்சியின் வேட்பாளராக கமலஹாசன் அவர்களை மக்களின் கட்சியின் நிர்வாக குழு செயற்குழு ஏகமனதாக முடிவு செய்து அறிவிக்கிறது.

மாநிலங்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மையக் கட்சியின் வேட்பாளரான கமல்ஹாசனுக்கு தங்களின் ஆதரவை நல்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி கட்சிகளை மக்கள் நீதி மையம் கட்சியின் நிர்வாக குழு செயற்குழு கேட்டுக்கொள்கிறது என்றும் தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version