Close Menu
    What's Hot

    2-3 வாரங்களில் போர் முடிவுக்கு வரும்!. இன்று இரவு 9 மணிக்கு டிரம்ப் முக்கிய அறிவிப்பு!.

    தவெக-விற்கு தாவும் தனியரசு!. புஸ்ஸி ஆனந்துடன் சந்திப்பு!. காங்கேயத்தில் போட்டி?

    “தம்பி மாதிரி”… விஜய்யை விமர்சிக்க மாட்டேன்!. நடிகர் சுந்தர்.சி பேச்சு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தவெக பரப்புரைக்கு முட்டுக்கட்டை; திடீர் பள்ளங்கள் எங்கிருந்து வந்தன? விஜய் கேள்வி!.
    தமிழ்நாடு

    தவெக பரப்புரைக்கு முட்டுக்கட்டை; திடீர் பள்ளங்கள் எங்கிருந்து வந்தன? விஜய் கேள்வி!.

    Editor web3By Editor web3March 27, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijay tvk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்ட பரப்புரைக்குச் சென்னை மாநகரக் காவல் துறையும், அதிகாரிகள் சிலரும் இணைந்து முட்டுக்கட்டை போட்டிருப்பது, ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு பாசிசத் தாக்குதலே ஆகும் என விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.

    தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்ட பரப்புரைக்குச் சென்னை மாநகரக் காவல் துறையும், அதிகாரிகள் சிலரும் இணைந்து முட்டுக்கட்டை போட்டிருப்பது, ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு பாசிசத் தாக்குதலே ஆகும். 

    நிகழ்ச்சிக்கு இரண்டு நாள்கள் முன்பே (26/03/26) தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, முல்லை நகர் சந்திப்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது. ஆனால், நம்முடைய தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
    இந்த திடீர் பள்ளங்களும் தடுப்புகளும் எங்கிருந்து வந்தன?? இந்த நிலையில் அங்கே காவல் துறை ஆய்வு செய்து 3000 பேர் கூடமுடியாது என்று கூறியுள்ளது. இதன் அடிப்படையில் தற்போது அந்த இடம் பிரசாரம் செய்வதற்கு உகந்ததல்ல என்று அனுமதி மறுக்கப்பட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
    இப்படி அதிகாரிகள் சிலரின் துணையுடன் த.வெ.க.விற்கு எதிராகச் செயல்படும் தி.மு.க. காபந்து அரசுக்கு வெட்கமாக இல்லையா? தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள முயற்சி செய்யும் போதெல்லாம், தி.மு.க. அரசு ஏதேதோ காரணங்களைக் கூறி, அனுமதியைத் தாமதிப்பதும் அல்லது அனுமதி மறுப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
    மக்களின் பேராதரவைப் பெற்ற ஒரு புதிய அரசியல் கட்சியின் ஜனநாயக உரிமைகளைத் திட்டமிட்டு நசுக்கும் இந்தச் செயல், ஆளுங்கட்சியின் ஏவலர்களாக அதிகாரிகள் சிலர் செயல்படுகிறார்களா என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் “எங்களுக்கு எதிராக யார் உருவெடுத்தாலும் அவர்களை அதிகார பலத்தால் நசுக்குவோம்” என நினைப்பது அப்பட்டமான அடக்குமுறையே ஆகும். தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு தி.மு.க. எந்த அளவிற்கு அஞ்சுகிறது என்பதற்கு இந்தத் தடையே சாட்சி. எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயக விரோதத் தி.மு.க. ஆட்சியைத் தமிழக மக்கள், வீட்டிற்கு அனுப்பப் போவது உறுதி!
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாத்திரம் கழுவும் திரவமே சமையலறைப் பொருட்களிலேயே மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது!. அதிர்ச்சி தகவல்!
    Next Article இணையதளம் மூலம் விணப்பித்தால் விஜய்க்கு அனுமதி தரப்படும்..! சென்னை தேர்தல் அதிகாரி விளக்கம்..!
    Editor web3
    • Website

    Related Posts

    தவெக-விற்கு தாவும் தனியரசு!. புஸ்ஸி ஆனந்துடன் சந்திப்பு!. காங்கேயத்தில் போட்டி?

    April 1, 2026

    “தம்பி மாதிரி”… விஜய்யை விமர்சிக்க மாட்டேன்!. நடிகர் சுந்தர்.சி பேச்சு!

    April 1, 2026

    BREAKING| விஜய் உயிருக்கு ஆபத்து!. தவெக சார்பில் அமித் ஷாவுக்கு கடிதம்!

    April 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    2-3 வாரங்களில் போர் முடிவுக்கு வரும்!. இன்று இரவு 9 மணிக்கு டிரம்ப் முக்கிய அறிவிப்பு!.

    தவெக-விற்கு தாவும் தனியரசு!. புஸ்ஸி ஆனந்துடன் சந்திப்பு!. காங்கேயத்தில் போட்டி?

    “தம்பி மாதிரி”… விஜய்யை விமர்சிக்க மாட்டேன்!. நடிகர் சுந்தர்.சி பேச்சு!

    BREAKING| விஜய் உயிருக்கு ஆபத்து!. தவெக சார்பில் அமித் ஷாவுக்கு கடிதம்!

    “மக்களை சுரண்டும் பாஜக”!. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கண்டனம்!. 

    Trending Posts

    2-3 வாரங்களில் போர் முடிவுக்கு வரும்!. இன்று இரவு 9 மணிக்கு டிரம்ப் முக்கிய அறிவிப்பு!.

    April 1, 2026

    “நீங்கள் செய்தது தவறு”… ஸ்ரேயாஸ் ஐயருக்கு தண்டனை விதித்தது பிசிசிஐ!.

    April 1, 2026

    சிலிண்டரை தொடர்ந்து பெட்ரோல் விலையும் உயர்வு!. விமான எரிபொருள் விலை 2 மடங்கு உச்சம்!

    April 1, 2026

    ஒரே ஓவரில் 11 பந்துகள்!. ஐபிஎல்-லில் மோசமான சாதனையை படைத்த அர்ஷ்தீப் சிங்!

    April 1, 2026

    தவெக-விற்கு தாவும் தனியரசு!. புஸ்ஸி ஆனந்துடன் சந்திப்பு!. காங்கேயத்தில் போட்டி?

    April 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.