Close Menu
    What's Hot

    ஒரு நிமிட தாக்குதல்.. 180 பயங்கரவாதிகள் பலி!. இஸ்ரேல் அறிவிப்பு!

    ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்!. இந்தியாவுக்கு 5 தங்கம்!. வீராங்கனைகள் அபார சாதனை!

    யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி!. பிரதமர் இரங்கல்; நிவாரணம் அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»விருப்ப மனு வாங்க ஆர்வம் காட்டாத நிர்வாகிகள்!. வெறிச்சோடிய தேமுதிக அலுவலகம்!.
    தமிழ்நாடு

    விருப்ப மனு வாங்க ஆர்வம் காட்டாத நிர்வாகிகள்!. வெறிச்சோடிய தேமுதிக அலுவலகம்!.

    Editor web3By Editor web3February 9, 2026Updated:February 9, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    dmdk office
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் திமுக, அதிமுக பாஜக கூட்டணி கட்சிகள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணியில், பாமக, தாவாக, உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளது.மேலும் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்தி இறுதி செய்யப்பட்டுள்ளது.
    அதேபோல், திமுக- காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ளதாக ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் தேர்தலுக்காக கூட்டணி அமைப்பதில் எந்த முடிவையும் தேமுதிக தலைமை இதுவரை அறிவிக்கப்படவில்லை . அதிமுக கூட்டணியில் 8 தொகுதிகள் கொடுக்க அக்கட்சி முன்வந்துள்ளது. ஆனால் பிரேமலதாவோ ராஜ்யசபா சீட் மற்றும் தன் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டும் என்று வலியுறுத்துவதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதனால் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக இணைவதில் இழுபறி நீடித்து வருகிறது. மறுப்புறம், தேமுதிகவை திமுக கூட்டணியில் இணைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. சுமார் 6 தொகுதிகள் வரை தேமுதிகவிற்கு திமுக தருவதாக பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது.

    ஆனால் அதற்கும் முட்டுக்கட்டை போட்ட பிரேமலதா ஒரு ராஜ்யசபா சீட் மற்றும் 10 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டுள்ளார்.இதற்கு திமுக தயங்குகிறது. காரணம் தேமுதிகவின் வாக்கு வங்கி 1 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. இதனால், எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

    இந்த சூழலில் சட்டமன்ற தேர்தலுக்காக தேமுதிக சார்பில் போட்டியிட விருப்பமான விநியோகம் நடைபெற்று வருகிறது. ஒருபுறம் அதிமுக சார்பில் விருப்பமனு விநியோகம் கடந்த டிச.31ம் தேதியுடன் நிறைவு பெற்றது. மொத்தம் சுமார் 9,500 பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனுவை அளித்திருந்தனர். அவர்களிடம் நேர்காணலும் நடத்தப்பட்டது.

    இதேபோல் தவெகவில் கடந்த பிப்.6 முதல் விருப்பமனு விநியோகம் செய்யப்பட்டு நேர்காணல் நடத்தப்பட்டது. விருப்பமனு விநியோகம் தொடங்கிய முதல் நாளே, சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்குள் ஒரே நேரத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடியதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    இப்படியிருக்கையில், தேமுதிக சார்பில் கடந்த பிப்.6 முதல் விருப்பமனு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், நான்காவது நாளான இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்கள் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ள நிலையில் தற்போது வரை எந்த ஒரு கட்சி நிர்வாகிகளும் விருப்ப மனு வாங்க வரவில்லை ஆர்வம் காட்டவில்லை

    dmmk office 1

    தமிழக சட்டப் பேரவை தேர்தல் பொது தொகுதிக்கு ரூ.15 ஆயிரமும், தனித் தொகுதிக்கு ரூ.10 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் பொதுத் தொகுதிக்கு ரூ.10 ஆயிரமும், தனித் தொகுதிக்கு ரூ.5 ஆயிரமும் கட்டணமாக செலுத்தி விருப்ப மனுக்களைப் பெற்றுக்கொள்ளலாம் என தனித்தனியாக இரண்டு மேஜைகள் அமைக்கப்பட்டு அங்கு விருப்ப மனு வழங்குபவர் காத்துக் கொண்டிருக்கிறார்

    தற்போது வரை யாரும் விருப்பம மனு வாங்க ஆர்வம் காட்டாததால் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது. இது தேமுதிகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசேப்பாக்கத்தில் விசிலுக்கு தடை!. அரசியல் காரணமா?. ஐசிசி, பிசிசிஐ விளக்கம்!. 
    Next Article தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 8.5 மடங்கு நிதி ஒதுக்கீடு!. அஸ்வினி வைஷ்ணவ் பதில்!
    Editor web3
    • Website

    Related Posts

    ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்!. இந்தியாவுக்கு 5 தங்கம்!. வீராங்கனைகள் அபார சாதனை!

    April 11, 2026

    யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி!. பிரதமர் இரங்கல்; நிவாரணம் அறிவிப்பு!

    April 11, 2026

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    April 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஒரு நிமிட தாக்குதல்.. 180 பயங்கரவாதிகள் பலி!. இஸ்ரேல் அறிவிப்பு!

    ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்!. இந்தியாவுக்கு 5 தங்கம்!. வீராங்கனைகள் அபார சாதனை!

    யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி!. பிரதமர் இரங்கல்; நிவாரணம் அறிவிப்பு!

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    Trending Posts

    ஒரு நிமிட தாக்குதல்.. 180 பயங்கரவாதிகள் பலி!. இஸ்ரேல் அறிவிப்பு!

    April 11, 2026

    ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்!. இந்தியாவுக்கு 5 தங்கம்!. வீராங்கனைகள் அபார சாதனை!

    April 11, 2026

    யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி!. பிரதமர் இரங்கல்; நிவாரணம் அறிவிப்பு!

    April 11, 2026

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    April 10, 2026

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    April 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.