Close Menu
    What's Hot

    ராஜ்யசபா சீட்டுக்கு அடிபோடுகிறதா காங்.,? முதல்வர் விஜய்யை சந்தித்தார் ப.சிதம்பரம்..!!

    புலி பட விவகாரம்..!! முதல்வர் விஜய்க்கு எதிரான மனு தள்ளுபடி..!! சென்னை ஹைகோர்ட் அதிரடி..!!

    மனு கொடுக்க குவிந்த மக்கள்… வெளியே வந்த முதல்வர் மனுப் பெட்டி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 8.5 மடங்கு நிதி ஒதுக்கீடு!. அஸ்வினி வைஷ்ணவ் பதில்!
    தமிழ்நாடு

    தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 8.5 மடங்கு நிதி ஒதுக்கீடு!. அஸ்வினி வைஷ்ணவ் பதில்!

    Editor web3By Editor web3February 9, 2026Updated:February 9, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Ashwini Vaishnaw
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ரயில்வே திட்டங்களுக்கான நிதியை விரைந்து வழங்கிடவும், முக்கியமான திட்டங்களை மீண்டும் தொடங்கிடவும், தமிழ்நாட்டிற்குக் கூடுதலாக புதிய ரயில்வே திட்டங்களை அனுமதித்திடவும் ரயில்வே அமைச்சகத்திற்கு உரிய அறிவுரைகளை வழங்கிடுமாறு கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (பிப். 8) கடிதம் எழுதியிருந்தார்.

    இந்தநிலையில், 2014-ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டிற்கான பட்ஜெட் ஒதுக்கீடு 8.5 மடங்குக்கும் மேலாக அதிகரித்து, 2026-27 நிதியாண்டில் 7,611 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்றும், நிதிப் பற்றாக்குறையால் திட்டங்கள் எதுவும் முடங்கவில்லை என்றும், அதுபோன்ற எந்தவொரு கூற்றும் ஆதாரமற்றது என்றும் வைஷ்ணவ் பதிலளித்துள்ளார்.

    https://x.com/AshwiniVaishnaw/status/2020726833453678697?

    மேலும், தமிழகத்தில் தாமதமாகி வரும் ரயில்வே திட்டங்களுக்கு, மத்திய அமைச்சகத்தால் நிதி விடுவிப்பதில் ஏற்படும் தொடர் தாமதங்களே காரணம் என்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அஷ்விணி வைஷ்ணவ், அந்தக் குற்றச்சாட்டுகள் ‘ஆதாரமற்றவை’ என்று குறிப்பிட்டார். மேலும், ‘ஒத்துழைப்பு இல்லாமல் வளர்ச்சி சாத்தியமில்லை’ என்றும், மாநில அரசிடம் நிலுவையில் உள்ள நிலம் கையகப்படுத்தும் பணிகளாலேயே பல முக்கியத் திட்டங்கள் தாமதமாகின்றன என்றும் கூறினார்.

    மேலும், தமிழக ரயில்வே திட்டங்களுக்காக மொத்தமாக தேவைப்படும் 4,326 ஹெக்டேரில் இதுவரை 1,052 ஹெக்டேர் மட்டுமே (24%) ரயில்வே துறைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், நிலம் கையகப்படுத்துவதற்காக தமிழக அரசிடம் ரூ.1,465 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது என்று அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிருப்ப மனு வாங்க ஆர்வம் காட்டாத நிர்வாகிகள்!. வெறிச்சோடிய தேமுதிக அலுவலகம்!.
    Next Article ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திட்டம்!. எதிர்க்கட்சிகள் தீவிர ஆலோசனை!.
    Editor web3
    • Website

    Related Posts

    ராஜ்யசபா சீட்டுக்கு அடிபோடுகிறதா காங்.,? முதல்வர் விஜய்யை சந்தித்தார் ப.சிதம்பரம்..!!

    June 2, 2026

    புலி பட விவகாரம்..!! முதல்வர் விஜய்க்கு எதிரான மனு தள்ளுபடி..!! சென்னை ஹைகோர்ட் அதிரடி..!!

    June 2, 2026

    மனு கொடுக்க குவிந்த மக்கள்… வெளியே வந்த முதல்வர் மனுப் பெட்டி!

    June 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ராஜ்யசபா சீட்டுக்கு அடிபோடுகிறதா காங்.,? முதல்வர் விஜய்யை சந்தித்தார் ப.சிதம்பரம்..!!

    புலி பட விவகாரம்..!! முதல்வர் விஜய்க்கு எதிரான மனு தள்ளுபடி..!! சென்னை ஹைகோர்ட் அதிரடி..!!

    மனு கொடுக்க குவிந்த மக்கள்… வெளியே வந்த முதல்வர் மனுப் பெட்டி!

    3 இடங்களில் ரேடார் கருவிகள்.. தொடர் கண்காணிப்பு..!! அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி..!!

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதிக்கு முன்னேறிய சபலென்கா..!

    Trending Posts

    திரையுலகை ஆளும் சக்ரவர்த்தி ‘இசைஞானி’ இளையராஜா!

    June 2, 2026

    எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்..!! திருமாவளவன் திட்டவட்டம்..!!

    June 2, 2026

    இசைஞானி இளையராஜா பிறந்தநாள்..! வாழ்த்து தெரிவிக்க குவிந்த ரசிகர்கள்..!

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    தமிழக அமைச்சரவை மூப்பு நிலைப் பட்டியல் வெளியீடு: முதல் 3 இடங்களில் முதலமைச்சர் விஜய், ஆனந்த், ஆதவ் அர்ஜூனா!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.