லைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம்.

இச்சமயங்களில் உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் காய்கறி கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, புகழ் பெற்ற மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழ கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு கண்காட்சிகள் நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் காரணமாக கோடை விழாக்கள் தாமதமாகியுள்ளன. இதனையடுத்து கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக நூற்றாண்டு அரசு ரோஜா பூங்காவில் நேற்று 21ஆவது ரோஜா மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தொடங்கி வைத்தார்.

கடந்த ஆண்டு மூன்று நாட்கள் நடத்தப்பட்ட ரோஜா கண்காட்சியை 35 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர். இந்த நிலையில், இந்த ஆண்டு அதிக அளவு சுற்றுலா பயணிகள் பார்வையிடுவர்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 5 நாட்கள் ரோஜா மலர் கண்காட்சி நடைபெறும் என தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு ரோஜா கண்காட்சிக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக சுமார் 1 லட்சம் சிகப்பு மற்றும் மஞ்சள் வண்ணங்களில் ரோஜா மலர்கள், கார்னேசன் உள்ளிட்ட மலர்களை கொண்டு 12 அடி உயரம், 14 அடி அகலம் கொண்ட அன்னப்பறவை வடிவமைக்க பட்டுள்ளது. ஹார்ன்பில் பறவை, கழுகு வடிவமைப்பும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் வண்ண ரோஜா மலர்களால் கழுகு வடிவமைப்பு, Bar Headed Goose, இந்தியன் பேரடைஸ், பிளை கேட்ச், மலபார் டிராகன் பறவை, உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வண்ண வண்ண மலர்களை கொண்டு வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளது .

 

மேலும் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள 35 ஆயிரம் ரோஜா செடிகளில் ஊதா, வெள்ளை, சிகப்பு, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வண்ண, வண்ண ரோஜா மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இதனிடையே ரோஜா மலர்களுக்கிடையே வெள்ளை, மஞ்சள் உள்ளிட்ட சாமந்தி மலர்களும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பூங்காவில் உள்ள ரோஜா மலர்களால் உருவாக்கப்பட்டுள்ள பறவை வடிவங்களான உருவாக்கப்பட்டுள்ள உருவங்கள் முன்பு புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று உதகை நூற்றாண்டு ரோஜா பூங்காவில் முதல் கோடை விழாவாக துவங்கி உள்ள ரோஜா மலர் கண்காட்சியை இதுவரை பத்தாயிரம் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து உள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version