டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது.

சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

காலையில் 95.94 ஆக இருந்த நிலையில் பிற்பகலில் ரூபாயின் மதிப்பு 96.11 என சரிவை சந்தித்துள்ளது.ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் இறக்குமதி பொருட்களுக்கான விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவதால், இந்திய பங்குச்சந்தையில் இருந்து அந்நிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வருகின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version