திமுகவில் இணைந்த ஒ.பன்னீர்செல்வத்தை தகுதி நீக்கம் செய்யக்கோரி சட்டமன்றச் செயலாளர் சீனிவாசனுக்கு அதிமுக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். தொடர்ந்து  சட்டமன்றத்திற்கு சென்ற ஓ. பன்னீர்செல்வம், சட்டமன்றச் செயலாளரை நேரில் சந்தித்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். தற்போது ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக ஆட்சியில் 3 முறை முதலமைச்சராக இருந்துள்ள ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. இது ”உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யும் செயல்” என்று அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது.

இந்த சூழலில் திமுகவில் இணைந்த ஒ.பன்னீர்செல்வத்தை தகுதி நீக்கம் செய்யக்கோரி அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் சட்டமன்றச் செயலாளர் சீனிவாசனிடம், அதிமுகவை சேர்ந்த சட்டமன்ற எதிர்க்கட்சி துணை கொரடா சு.ரவி அளித்துள்ள கடிதத்தில் ஒ. பன்னீர்செல்வம் அளித்த ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்ளாமல், அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version