“ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை நிகழ்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 1 ஆம் தேதி வைத்தார். இந்தநிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குசாவடி பகுதியிலும், அரசின் 4 ஆண்டுகால சாதனைகளை கூறி (வீட்டுக்கு வீடு) மக்களை தேடிச் சென்று பரப்புரையை தி.மு.க.வினர் இன்று முதல் 45 நாட்கள் நடத்துகின்றது.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கான பணிகளை திமுக முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில், வாக்குச்சாவடிதோறும் 30 சதவீதம் வாக்காளர்களை தி.மு.க உறுப்பினர்களாக்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் அறிவித்தார்.
இதையடுத்து, இந்த உறுப்பினர் சேர்க்கை திட்டத்தை ஜூலை 1 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, நேற்று திமுகவின் நிர்வாக ரீதியான 76 மாவட்டங்களிலும் “ஓரணியில் தமிழ்நாடு” விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இன்று
தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடி பகுதிகளிலும்
வீடு வீடாக சென்று மக்களை தேடி சென்று பரப்புரையை தொடங்கி உள்ளனர்.
அப்போது, தி.மு.க அரசின் 4 ஆண்டுகால சாதனைகளையும், திட்டங்களையும்,
தி.மு.க நடத்தியுள்ள மாநில உரிமை போராட்டங்களையும் மக்களிடத்தில் எடுத்து சொல்லி ஒவ்வொரு வாக்காளரையும் “ஓரணியில் தமிழ்நாடு’ என்று பிரச்சார இயக்கத்தில் இணைந்தனர்.
தி.மு.க நிர்வாகிகள் மக்களை நேரில் சந்திக்கும்போது, தி.மு.க உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வழங்கினர். அந்த உறுப்பினர் சேர்க்கை படிவத்தில் 6 கேள்விகள் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது.
எந்த நெருக்கடியான சூழலிலும் தமிழ்நாட்டின் மண் மொழி மானம் காப்பாற்றப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா ?
மகளிர் தங்களின் உரிமைத்தொகையை பெற்றிடவும், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் நலன் காக்கப்படும் நலத்திட்டங்களை நாம் தொடர்ந்து பெற்றிட வேண்டுமா?
மாணவர்களுக்கான கல்வி நிதி, மாநில வளர்ச்சிக்காக வழங்கப்பட வேண்டிய நிதிப்பகிர்வு, நியாயமற்ற தொகுதி மறுவரையறை, கொடுமையான நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் போன்றவற்றிலிருந்து தமிழ்நாடு மற்றும் நம் இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாத்திட வேண்டுமா?
டெல்லியின் அதிகாரத்திற்கு அடிபணியாமல் தமிழ்நாட்டின் உரிமையை காக்கும் முதலமைச்சர் தான் நம் மாநிலத்தை ஆள வேண்டுமா?
இவை அனைத்தும் சாத்தியப்பட மற்றும் நிலையான ஆட்சியினை வழங்கிட அனுபவமிக்க மு.க.ஸ்டாலின் போன்ற ஒரு தலைவரால் மட்டுமே முடியும் என்று நம்புகிறீர்களா ?
அப்படியானால், நம் மாநிலத்தின் கோடிக்கணக்கான குடும்பங்களுடன், தாங்களும் தங்கள் குடும்பமும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என கரம் கோர்க்க விரும்புகிறீர்களா?
போன்ற கேள்விகளுக்கு ஆம்/இல்லை என்ற வடிவில் பொதுமக்கள் பதிலளித்தார்கள்.
“ஓரணியில் தமிழ்நாடு” என்ற பரப்புரையின்போது கேட்கப்படும் 6 கேள்விகளுக்கு பதிலளித்து தி.மு.க. உறுப்பினராக மக்கள் இணைந்தார்கள்.
குறிப்பாக, “ஓரணியில் தமிழ்நாடு” என இணைந்திட 94890 94890 என்ற எண்ணில் அழைக்கலாம் என்றும் தி.மு.க தலைமை தெரிவித்துள்ளது.
மேலும், இந்த பரப்புரையின் முக்கிய அம்சமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இல்லங்களையும் 100 சதவீதம் சந்தித்திருக்க வேண்டும். எதிர்கட்சியினர் இல்லங்களுக்கும் நேரில் சென்று பேச வேண்டும். ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தி.மு.க உறுப்பினர் சேர்க்கைக்கான பரப்புரை மட்டும் இல்லை. இது தமிழ்நாட்டு மக்களை நம் மண், மொழி, மானம் காக்க ஒன்றிணைக்கும் ஒரு முன்னெடுப்பு. வாக்குச்சாவடி முகவர், பூத் டிஜிட்டல் ஏஜென்ட், ஒரு பெண், ஒரு இளைஞர், பிஎல்சி உறுப்பினர், தி.மு.க நிர்வாகிகள், செயல்வீரர்கள் கொண்ட குழுவாக சேர்ந்துதான் ஒவ்வொரு வீட்டுக்கும் செல்ல வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இன்று முதல் 45 நாட்கள் மக்களை தேடிச் சென்று தி.மு.க.வினர் சந்திக்கின்றனர்.
ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு பிறகு, தமிழ்நாடு முழுக்க ஓரணியில் தமிழ்நாடு நிறைவு விழாக்கள் நடைபெற உள்ளது. 10 மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் வர இருப்பதால் உறுப்பினர் சேர்க்கை பணியை “மினி தேர்தல் பரப்புரையாக” மேற்கொள்ள நிர்வாகிகளுக்கு தி.மு.க தலைமை அறிவுறுத்தியுள்ளது.