செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் இருந்து ஒரே நேரத்தில் அதிகபடியான வாகனங்கள் தென் மாவட்டங்களுக்கு செல்வதால் சென்னையின் நுழைவாயிலாக இருக்ககூடிய பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நாளை மறுநாள் பக்ரித் என்பதாலும் வார விடுமுறை என்பதாலும் சென்னையில் இருந்து கார், வேன், கனரக வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், தனியார் நிறுவன பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து ஆமைபோல் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது