இடுக்கி மாவட்டம் அணைக்கரை அருகே, தண்ணீர் இல்லாத 15 ஆழ மொட்டை கிணற்றில் நாயோடு சேர்ந்து தவறி விழுந்த புலியை தேக்கடி பெரியார் புலிகள் காப்பக வனத்துறையினர் துப்பாக்கி மூலம் மயக்க மருந்து செலுத்தி பிடித்து மீட்டனர்.
தமிழக -கேரள எல்லையை இணைக்கும் இடுக்கி மாவட்டம் வண்டன்மேடு பஞ்சாயத்திற்கு உட்பட்ட அணைக்கரை செல்லார் கோயில் அருகே உள்ளது மைலாடும்பாறை மலைப்பகுதி.
இங்கு சன்னி என்பவருக்கு சொந்தமான ஏலக்காய தோட்டம் உள்ளது.இந்த தோட்டத்தில் புலி உறுமல் புதிதாக உள்ளது கண்டு சன்னி குடும்பத்தினர் அச்சம் கொண்டனர்.
தேடியதில், தண்ணீர் இல்லாத 15 அடி ஆழமுள்ள மொட்டை கிணற்றில், புலியும்,நாய் ஒன்றும் விழுந்து கிடப்பதை கண்டுள்ளனர்.
தகவல் கிடைத்ததும் நிகழ்விடம் வந்த வனத்துறையினர் புலிக்கும், நாய்க்கும் துப்பாக்கி மூலம் லாவகமாக மயக்க மருந்து செலுத்திப் பிடித்து மீட்டனர்.
பிடிபட்ட புலி மூன்று வயது மதிக்கத்தக்க ஆண் புலி எனவும், மருத்துவ பரிசோதனைக்குப் பின் புலி, அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு திறந்து விடப்படும் என எப்படி பெரியார் புலிகள் காப்பக வனத்துறையினர் தெரிவித்தனர்.
புலியுடன் பல மணி நேரம் ஒரே குழிக்குள் கிடந்த நாயும் மயக்கம் தெளிந்து சாதுவாக கிளம்பியது.
நாயை வேட்டையாட புலி துரத்தி வந்திருக்கலாம் எனவும்,நாய் கிணற்றுக்குள் விழ, புலியும் அதைத்தொடர்ந்து தவறி விழுந்து இருக்கலாம் எனவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது …