Close Menu
    What's Hot

    முதல்வர் விஜய் உடன் அமெரிக்க தூதர் சந்திப்பு!

    ஐபிஎஸ் அதிகாரிகள் 14 பேர் இடமாற்றம்!

    சிங்கப் பெண் அதிரடிப்படை உதவி எண் “1091”!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»இடுக்கியில் கிணற்றில் விழுந்த புலி வனத்துறையின் துப்பாக்கி மயக்கத் திட்டம்
    தமிழ்நாடு

    இடுக்கியில் கிணற்றில் விழுந்த புலி வனத்துறையின் துப்பாக்கி மயக்கத் திட்டம்

    Editor TN TalksBy Editor TN TalksJune 9, 2025Updated:June 9, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tiger rescur iddiki
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இடுக்கி மாவட்டம் அணைக்கரை அருகே, தண்ணீர் இல்லாத 15 ஆழ மொட்டை கிணற்றில் நாயோடு சேர்ந்து தவறி விழுந்த புலியை தேக்கடி பெரியார் புலிகள் காப்பக வனத்துறையினர் துப்பாக்கி மூலம் மயக்க மருந்து செலுத்தி பிடித்து மீட்டனர்.

    தமிழக -கேரள எல்லையை இணைக்கும் இடுக்கி மாவட்டம் வண்டன்மேடு பஞ்சாயத்திற்கு உட்பட்ட அணைக்கரை செல்லார் கோயில் அருகே உள்ளது மைலாடும்பாறை மலைப்பகுதி.

    இங்கு சன்னி என்பவருக்கு சொந்தமான ஏலக்காய தோட்டம் உள்ளது.இந்த தோட்டத்தில் புலி உறுமல் புதிதாக உள்ளது கண்டு சன்னி குடும்பத்தினர் அச்சம் கொண்டனர்.

    தேடியதில், தண்ணீர் இல்லாத 15 அடி ஆழமுள்ள மொட்டை கிணற்றில், புலியும்,நாய் ஒன்றும் விழுந்து கிடப்பதை கண்டுள்ளனர்.

    தகவல் கிடைத்ததும் நிகழ்விடம் வந்த வனத்துறையினர் புலிக்கும், நாய்க்கும் துப்பாக்கி மூலம் லாவகமாக மயக்க மருந்து செலுத்திப் பிடித்து மீட்டனர்.

    பிடிபட்ட புலி மூன்று வயது மதிக்கத்தக்க ஆண் புலி எனவும், மருத்துவ பரிசோதனைக்குப் பின் புலி, அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு திறந்து விடப்படும் என எப்படி பெரியார் புலிகள் காப்பக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    புலியுடன் பல மணி நேரம் ஒரே குழிக்குள் கிடந்த நாயும் மயக்கம் தெளிந்து சாதுவாக கிளம்பியது.

    நாயை வேட்டையாட புலி துரத்தி வந்திருக்கலாம் எனவும்,நாய் கிணற்றுக்குள் விழ, புலியும் அதைத்தொடர்ந்து தவறி விழுந்து இருக்கலாம் எனவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது …

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமேற்குமாவட்டங்களில் தொடரும் கொலை-கொள்ளை: திமுக அரசு எதை செய்தது? – இபிஎஸ் கேள்வி
    Next Article ‘பேரன்பும் பெருங்கோபமும்’ – தங்கர் பச்சான் மகனின் சமூக விமர்சனப் படம் வெளியானது!
    Editor TN Talks

    Related Posts

    முதல்வர் விஜய் உடன் அமெரிக்க தூதர் சந்திப்பு!

    June 22, 2026

    ஐபிஎஸ் அதிகாரிகள் 14 பேர் இடமாற்றம்!

    June 22, 2026

    சிங்கப் பெண் அதிரடிப்படை உதவி எண் “1091”!

    June 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வர் விஜய் உடன் அமெரிக்க தூதர் சந்திப்பு!

    ஐபிஎஸ் அதிகாரிகள் 14 பேர் இடமாற்றம்!

    சிங்கப் பெண் அதிரடிப்படை உதவி எண் “1091”!

    விஜய்யின் அரசியல் பயணமும் தந்தை எஸ்ஏசி-யின்  17 ஆண்டு கனவும்!

    மாண்புமிகு மாணவன் to மாண்புமிகு முதல்வர்! விஜய்யின் திரையும், களமும்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.