காரிமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மீது மாங்காய் ஏற்றி வந்த பிக்கப் வாகனம் நேருக்கு நேர் மோதியதில் இருவர் படுகாயமடைந்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பிக்கனஅள்ளியை சேர்ந்த முனிராஜ் என்பவர்  பிக்கப் வேன் ஒற்னில் நேற்று மாலை  காரிமங்கலத்தில் இருந்து மாங்காய் லோடு ஏற்றிக் கொண்டு பாலக்கோடு நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார்.

முதலிப்பட்டி நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த பிக்கப் வாகனம், சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது,

அச்சமயம் எதிரே வந்து கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது பிக்கப் வேன் மோதியதில் பைக்கில் வந்த சொன்னம்பட்டி கிராமத்தை சேர்ந்த வேடியப்பன்(45) ராஜா(56) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

பிக்கப் வாகனம் சாலையில் சாய்ந்து இருசக்கரவாகனத்தின்மீது  மோதிய சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாகன ஓட்டி மது போதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version