பாமக நிறுவனரும், தனது தந்தையுமான ராமதாஸிற்கு ஏதாவது ஆனால் அனைவரையும் தொலைச்சிடுவேன் என்று அன்புமணி பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டது. மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறிய ராமதாஸ் நேற்று முன் தினம் வீடு திரும்பினார். வீட்டில் ஓய்வில் இருந்து வரும் ராமராஸ கட்சி நிர்வாகிகள் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் ராமதாஸை சந்திப்பவர்களை அன்புமணி பகிரங்கமாக எச்சரித்துள்ளர்.

சென்னை உத்தண்டியில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அன்புமணி, “மருத்துவர் ராமதாஸ் நலமுடன் உள்ளார் ஒரு வாரத்திற்கு முன்பே அப்பாயிண்ட்மெண்ட் செய்யப்பட்டு இந்த ஆன்சியோ பரிசோதனை நடைபெற்றது. ஆனால் அவருடன் இருப்பவர்கள் அவரை காட்சி பொருள் போல அனைவருக்கும் போன் செய்து வரவழைத்து அவரை ஓய்வெடுக்க விடாமல் தொல்லை செய்து கொண்டிருக்கிறார்கள்.

தொடர்ந்து போன் செய்வது உள்ளிட்ட பல்வேறு தொந்தரவுகளை செய்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் உடன் இருக்கும்போது ஐயாவுடைய அறை மிகவும் பாதுகாப்பாக இருக்கும். யாரையும் அருகில் நெருங்க விட மாட்டோம், ஆனால் இப்போது யார் யாரையோ வரவழைத்து திட்டமிட்டு பார்க்க வைத்து கொண்டிருக்கிறார்கள்.

ஐயாவுக்கு ஏதாவது ஆனால் உடன் இருப்பவர்களை நான் சும்மா விட மாட்டேன், தொலைச்சிடுவேன். ஐயாவை வச்சுக்கிட்டு நாடகம் பண்ணிட்டு இருக்காங்க” என்று ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.

மேலும், மனதில் அவ்வளவு வலியை வைத்துக்கொண்டு தான் வெளியில் சிரித்துக் கொண்டிருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version