சேலம் மாவட்டம், நெய்க்காரப்பட்டி அருகே உள்ள புத்தூர் அக்ரஹாரம் பகுதியில் உள்ள முனியப்பன் கோவில் திருவிழாவை ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் எருதாட்டம் நிகழ்ச்சி நடத்தப்படும். இவ்வாண்டு முனியப்பன் கோவிலில் வைகாசி மாத திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
இதனையொடடி இன்றைய தினம் கோவில் அருகில் உள்ள திடலில் எருதாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்காக 70க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன. இந்த நிகழ்ச்சியை காண்பதற்காக பல்லாயிர கணக்கான பொதுமக்கள் அங்கு கூடியிருந்தனர்.
ஒவ்வொரு காளையாக அழைத்து வரப்பட்டு கோவிலில் பூஜை செய்த பின்னர் எருதாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்படிருந்தனர். எருதாட்ட நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருக்கையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் கதிரவன் என்பவரை காளை ஒன்று தனது கொம்பால் முட்டி தூக்கி வீசியது. இதில் அவரது வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது.இதனையடுத்து அங்கு இருந்த மருத்துவ குழுவினர் காயமடைந்த காவலருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து எருதாட்ட நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.