கோவை மாவட்டம் பொள்ளாச்சி – பல்லடம் சாலையில் ஆயுர்வேதிக் பிசியோதெரபி கிளினிக் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த இளம் பெண்கள் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனீஷும், அவருடன் இளம்பெண் ஒருவரும் கேரள ஆயுர்வேதிக் பிசியோதெரபி, அக்குபஞ்சர் கிளினிக் என்னும் பெயரில் இந்த மசாஜ் சென்டரை நடத்தி வந்துள்ளனர். ஆன்லைன் வாயிலாக இதற்கு கஷ்டமர்களையும் வரவழைத்துள்ளனர்.
இந்த நிலையில் மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாக பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசாருக்கு வந்த ரகசிய தகவலை எடுத்துஅவர்கள், வாடிக்கையாளர்களைப் போல அங்கு சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மசாஜ் பெயரில் அங்கு மூன்று இளம் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்ததது.
இதனையடுத்து சென்னை,சேலம், கோவை மாவட்டத்தைச் சென்ற அந்த மூன்று இளம் பெண்களை கைது செய்த போலீசார், அவர்களில் ஒருவரை நீதிமன்ற காவலுக்கும் மற்ற இருவரை காப்பகத்திற்கும் அனுப்பி வைத்துள்ளனர்.
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனீஸ் மற்றும் அவருடன் இருக்கும் இளம் பெண் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.
