சர்க்கரை அட்டைதாரர்கள் மற்றும் No Commodity Card (NC) அட்டதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை கிடைக்காது என்றும் மற்ற அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பணம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசாக அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியம் என்ற மகிழ்ச்சிச் செய்தியை அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தமிழ்நாட்டு மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரூ. 3000 ரொக்கமும் சேர்த்து அளிக்கப்படும் என்ற செய்தியை வெளியிட்டுள்ளார். மேலும் அதனுடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்புடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
யாருக்கெல்லாம் கிடையாது: இந்தாண்டு பொங்கல் பரிசு தொகை ரூ.3,000 மற்றும் பொருள்களின் தொகுப்பு அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தான் தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சர்க்கரை ரேஷன் அட்டை (Sugar Cards) வைத்திருப்பவர்களுக்கு இந்தப் பொங்கல் பரிசுத் தொகை மற்றும் பொருட்கள் கிடைக்காது. மேலும் கௌரவ ரேஷன் அட்டைதாரர்கள் எனப்படும் வெறும் அடையாளத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் ரேஷன் அட்டைகளுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படாது.
யாருக்கெல்லாம் கிடைக்கும்: அரசின் இந்த பொங்கல் பரிசு தொகுப்பானது, மொத்தம் 2,22,91,710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் பயன்பெறுவர். பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பரிசு மொத்தம் ரூ.6936,17,47,959 செலவில் வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
