பூஜை செய்தால் பணம் இரட்டிப்பாகும் எனக் கூறி நூதன முறையில் மோசடி.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள T. கள்ளிப்பட்டியைச் சேர்ந்த சித்தார்த்தன் மற்றும் அவரது மகன் விசுவாமித்திரன் இருவரும் சேர்ந்து பணத்தை வைத்து பூஜை செய்தால் இரண்டு மடங்காக பணம் பெருகும் என்று ஆசை வார்த்தை கூறி மதுரை திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த அழகர்சாமியிடம் ஒன்பது லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுள்ளனர்.

சித்தார்த்தன் மற்றும் அவரது மகன் விசுவாமித்திரன் ஆகிய இருவரும் சேர்ந்து அழகர்சாமி கொடுத்த பணத்தை தங்கள் வீட்டில் வைத்து பூஜை செய்து சூட்கேசில் கொடுத்துள்ளனர்.

அதை வாங்கிய அழகர்சாமி தனது வீட்டிற்கு கொண்டு சென்று சூட்கேசை திறந்து பார்த்தபோது சூட்கேஸ் முழுவதும் மல்லிகைப்பூ மட்டும் நிரப்பி இருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து தந்தையும், மகனும் சேர்ந்து தன்னை மோசடி செய்தது தெரியவந்ததைத் தொடர்ந்து பெரியகுளம் பகுதியில் உள்ள T.கள்ளிப்பட்டியில் உள்ள சித்தார்த்தனிடம் வந்து கேட்டபோது.., பணம் கேட்டு வந்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி அவரைத் தாக்கி துரத்தி உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட அழகர்சாமி பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில், தந்தை,மகன் ஆகிய இருவரும் சேர்ந்து பண மோசடி செய்தது குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் தந்தை,மகன் இருவரையும் கைது செய்து இருவர் மீதும் பண மோசடி வழக்குப் பதிவு செய்து பெரியகுளம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதி உத்தரவின் பேரில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர் ….

Share.
Leave A Reply

Exit mobile version