தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று முழுமையாக விரிவாக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, புதிதாகப் பதவியேற்ற 23 அமைச்சர்களுக்கான இலாகாக்களை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முறைப்படி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளார்.
ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள புதிய அமைச்சர்களின் இலாகாக்கள் விவரம்:
செங்கோட்டையன் – வருவாய்த்துறை அமைச்சர்
மரிய வில்சன் (ஆர்.கே.நகர்) – நிதி அமைச்சர்
ஸ்ரீநாத் (தூத்துக்குடி) – மீன்வளத்துறை அமைச்சர்
கமலி (அவிநாசி) – கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்
விஜயலட்சுமி (குமாரபாளையம்) – பால்வளத்துறை அமைச்சர்
ரஞ்சித் குமார் – வனத்துறை அமைச்சர்
வினோத் (கும்பகோணம்) – வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்
ராஜீவ் குமார் (கிள்ளியூர் – காங்கிரஸ்) – சுற்றுச்சூழல் துறை அமைச்சர்
ராஜ்குமார் (கடலூர்) – வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்
காந்திராஜ் (அரக்கோணம்) – கூட்டுறவுத் துறை அமைச்சர்
மதன்ராஜ் (ஒட்டப்பிடாரம்) – சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்
ஜெகதீஸ்வரி (இராஜபாளையம்) – சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர்
விஸ்வநாதன் ( மேலூர் – காங்கிரஸ்) – உயர்கல்வித் துறை அமைச்சர்
குமார் (வேளச்சேரி) ஏஐ மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை
தென்னரசு (ஸ்ரீபெரும்புதூர்)- வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை
சம்பத் குமார் (கோவை வடக்கு) – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
சரத்குமார் (தாம்பரம்) – மனிதவள மேம்பாட்டுத்துறை
பர்வேஸ் (அறந்தாங்கி) – தொழிலாளர் நலத்துறை
விக்னேஷ் (கிணத்துக்கடவு) – மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை
விஜய் பாலாஜி – கைத்தறித்துறை
லோகேஷ் தமிழ்ச்செல்வன் – பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை
பார்த்திபன் (சேலம் தெற்கு) – போக்குவரத்துத் துறை அமைச்சர் (மோட்டார் வாகனச் சட்டங்கள் நிர்வாகம், போக்குவரத்து, தேசியமயமாக்கப்பட்ட போக்குவரத்து).
ரமேஷ் ( ஸ்ரீரங்கம்): இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்
முன்னதாக கடந்த மே 10 அன்று முதற்கட்டமாக முதலமைச்சருடன் சேர்த்து 10 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்ற நிலையில், பெரும்பாலான முக்கியத் துறைகள் முதலமைச்சரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. தற்போது இரண்டாம் கட்டமாக 23 அமைச்சர்கள் பதவியேற்று, அவர்களுக்கான துறைகளும் முழுமையாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
