பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை (நவ. 19) கோவை வருகையை முன்னிட்டு உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

கோவை கொடிசியா வளாகத்தில் நாளை (நவ. 19) தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் இயற்கை விவசாயத்தை வலியுறுத்தியும், அதற்கான தொழில்நுட்பங்கள் மற்றும் கொள்கைகளை வகுக்க வலியுறுத்தியும் விவசாயிகள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாநாட்டை தொடங்கி வைத்து பேசுகிறார்.

இந்த நிகழ்ச்சிக்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் நாளை (நவ. 19) பிற்பகல் 1.30 மணிக்கு கோவை வருகிறார். விமானநிலையத்தில் இருந்து மாநாடு நடைபெறும் இடத்துக்கு செல்லும் பிரதமர் மோடி, மாநாட்டை துவக்கி வைத்து பேசுவதுடன், சிறப்பாக செயல்பட்ட விவசாயிகளுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறார். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி மாலை 3.15 மணிக்கு கோவை விமானநிலையம் சென்று, அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version