தமிழக வெற்றி கழக நிர்வாகிகளை கண்டித்து செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டம், கணியம்பாடி பகுதியில் செயல்பட்டு வரும் செங்கல் சூளை உரிமையாளர்களிடம் மாதம் மாதம் தங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் தர வேண்டும் என தமிழக வெற்றிக்கழக ஒன்றிய செயலாளர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் லோகேஷ், ஈஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,
காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்து சட்டப்படி கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,
செங்கல் சூளை உரிமையாளர்களை மிரட்டும் செயல்களை உடனடியாக கைவிட வேண்டும்,
கடமை தவறிய காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கணியம்பாடி பேருந்து நிலையம் எதிரே பொதுமக்கள் தொழிலாளர்கள் சமூக ஆர்வலர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் தப்பாட்டம் செய்ய முயற்சி செய்தனர் இவர்களை தடுத்த நிறுத்தி காவல்துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பொதுமக்களின் திடீர் போராட்டத்தால் கணியம்பாடி பேருந்து நிலையம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. போலீசார் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
