புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணி பெரும்பான்மையைப் பெற்று ஆட்சி  அமைத்துள்ளது. இந்த நிலையில் புதிய அரசு ஆட்சி  பொறுப்பேற்றக்கூடிய நிலையில் முதல் பட்ஜெட் கூட்டத்தொடரில் துணைநிலை ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் 2026-2027 ஆண்டிற்கான பட்ஜெட் குறித்தான ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெரும் கூடத்தில் தற்காலிக சபாநாயகர் அன்பழகன், இலாகா ஒதுக்கப்படாமல் இருக்கும் அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் திமுக சட்டமன்ற கட்சித் தலைவர் நாஜும் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

வருகின்ற நிதி ஆண்டிற்கான நிதி நிலை குறித்த துறை ரீதியான ஆலோசனை நடைபெற்றது. இதில் 13.397 கோடி ரூபாய் காண திட்ட மதிப்பீட்டிற்கான கோப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஒப்புவதற்கு அனுப்பி வைக்கப்படுவார் அதன் பிறகு உள்துறை அமைச்சகம் பட்ஜெட் தொகையை விருது செய்து ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த நிதிநிலை அறிக்கையில் 13.300 கோடி ரூபாய் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது தற்பொழுது 13.397 கோடி ரூபாய் நிதிநிலை அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 97 கோடி ரூபாய் கூடுதலாக  நிதிநிலை அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version