சென்னையில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் 2 நாட்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது.
தனுஷின் இட்லி கடை, சிம்புவின் 49வது திரைப்படம், சிவகார்த்திகேயனின் பராசக்தி உள்ளிட்ட படங்களை Dawn பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் துணை முதலமைச்சரும் ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளருமான உதயநிதிக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார். உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடும் பெரும்பாலான படங்களை, dawn பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஆகாஷ் பாஸ்கரனின் வீட்டில் அமலாக்கத் துறையினர் கடந்த இரண்டு நாட்களாக சோதனையில் ஈடுபட்டனர். குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை ஆகாஷ் பாஸ்கரன் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பில் தயாரிப்பதற்கான முதலீடு எங்கிருந்து வந்தது என்ற கோணத்தில் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், 2 நாட்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நள்ளிரவு நிறைவடைந்தது.
இதனிடையே ஆகாஷ் பாஸ்கரனின் கார் ஓட்டுநரிடம் நடைபெற்ற விசாரணையும் நிறைவடைந்தது.
சினிமாத்துறை சார்ந்த நிறுவனங்களுக்கும் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்தது தொடர்பாக அமலாகத்துறை விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
