திருச்சியில் உள்ள முக்கிய ரயில்வே மேம்பாலம் பணிகளை, துரை வைகோ எம்.பி. நேரில் ஆய்வு செய்தார்.
திருச்சி மாரிஸ் திரையரங்கு அருகே புதிய ரயில்வே மேம்பாலம் கட்டும்பணி நடைபெற்று வந்தது. பணிகள் மிகவும் தாமதமாகுவதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்
இது குறித்து திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது காலதாமதம் ஏற்படாமல் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து திருச்சி அரிஸ்டோ ரயில்வே மேம்பாலம் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து பேருந்து நிலையம் செல்லும் எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகர் அருகே உள்ள பாலத்தையும் மற்ற பாலங்கள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டு பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது அரசு அதிகாரிகள் மதிமுக மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.
