கோவைப்புதூர் பகுதியில் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் பண்முக பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது. கிருஷ்ணா ஆதித்யா கல்லூரியில் கடந்த 2-ம் தேதி தொடங்கிய இந்த பயிற்சி முகாம் 15 நாட்கள் நடைபெற்றது. தென் தமிழக அளவில் நடைபெற்ற இந்த முகாமின் நிறைவு விழா நடைபெற்றது.

இதில் பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கினார். தொடர்ந்து தென் பாரத மக்கள் தொடர்பு துறை செயலாளர் பிரகாஷ் சிறப்புரை ஆற்றினார். அத்தோடு தென் தமிழக தென் தமிழக மாநில தலைவர் ஆடலரசன் உட்பட பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

கோவை கோட்ட செயலாளர் அஜய்கோஷ் தலைமையில் நடந்த இம்முகாமில், 900 பேர் இணைந்து பயிற்சி பெற்றனர். நிறைவு விழாவில், பயிற்சி முகாமில் பங்கேற்ற ஸ்வயம் சேவர்கள் கற்றுக் கொண்ட காராத்தே, சிலம்பம், யோகா, சமத்தான், விளையாட்டு, கோஷ் வாத்திய இசை போன்றவற்றை நிகழ்த்தி காட்டினர். முகாமினை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version