தமிழ்நாடு ஆளுநர் இல்லத்தின் பெயர் ராஜ்பவன் என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ‘லோக் பவன்’ (மக்கள் பவன்) என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள ஆளுநர் மாளிகைகளின் பெயர் மாற்ற 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆளுநர் மாநாட்டில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த நவம்பர் 25 ஆம் தேதி உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி ஆளுநர் இல்லத்தின் பெயர் ‘லோக் பவன்’ (மக்கள் பவன்) என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி ‘ராஜ்பவன்’ என்று அழைக்கப்பட்டு வந்த ஆளுநர் இல்லம் இனி லோக் பவன் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய பிரதேசங்களில் உள்ள ஆளுநர் மாளிகை லோக் நிவாஸ் என அழைக்கப்படும்.
வளர்ச்சியடைந்த இந்தியா என்ற நோக்கத்தின் கீழ் ஜனநாயக அமைப்புகளில் மக்களின் பங்கேற்பை வலியுறுத்துவதே இந்தப் பெயர் மாற்றத்தின் நோக்கம் என்று மத்திய அரசு வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
ஆளுநர் இல்லம் பொதுமக்கள் அணுகக்கூடியதாகவும், மக்களின் ஆளுகைக்கு அடையாளமாகவும் மாற்றும் தேசிய அளவிலான முயற்சியின் ஒரு பகுதியாக இந்தப் பெயர் மாற்றம் அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version