பாஜக ஆட்சியில் ரூ.1.50 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், திருச்சியில் விவசாயிகளின் நண்பன் போல் பிரதமர் கபட நாடகம் போட்டுள்ளார் என்றும் அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார்.
விவசாயிகளுக்கு எதிராக திமுக செயல்படுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியிருந்தார். இது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, விவசாயிகள் குறித்து பேசுவதற்கு பிரதமருக்கு தார்மீக உரிமை இருக்கிறதா? தேர்தல் வந்துவிட்டால் பிரதமருக்கு உடனடியாக பாசம் வந்துவிடும். விவசாயிகளுக்காக பிரதமர் மோடி செய்தது என்ன?
இந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு பா.ஜ.க. ஆட்சியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி உள்ளனர். போராட்டம் நடத்திய விவசாயிகளின் மீது வாகனத்தை விட்டு ஏற்றி 4 பேரை கொன்றதை யாரும் மறந்துவிடவில்லை.
திருச்சி கூட்டத்தில் விவசாயிகளின் நண்பன் போல் பிரதமர் கபட நாடகம் போட்டுள்ளார். மதுரை டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு அ.தி.மு.க. ஆதரவு அளித்தது. 11 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் சுமார் 1.50 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்ற பிரதமர் மோடியின் வாக்குறுதி என்னவானது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

