சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட நிலையில் அவர்களது குடும்பத்தினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போனில் பேசி ஆறுதல் கூறினார்.

தமிழக அமைச்சரும், சிவகங்கை மாவட்டச் செயலாளருமான பெரியகருப்பன், இன்று மடப்புரத்தில் உள்ள அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்றார். அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அவர், அங்கிருந்தபடியே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை செல்போனில் தொடர்பு கொண்டார்.

உயிரிழந்த அஜித்குமாரின் தாயார் மற்றும் சகோதரருடன் முதலமைச்சர் செல்போனில் பேசினார். அப்போது,
திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு என்று கூறினார்.

மேலும் கடமை தவறிக் குற்றம் இழைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த அரசு தண்டனை பெற்றுத் தரும்! பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலாக நிற்கும் என்றும் அவர் கூறினார்.

Share.
Leave A Reply

Exit mobile version