நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்து வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வாஞ்சிநாதன், நீதிபதி GR சுவாமிநாதன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக வழக்கு நீதிபதிகள் GR சுவாமிநாதன் அமர்வில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.வாஞ்சிநாதன். இவர் எங்களில் ஒருவர் (ஜி.ஆர்.சுவாமிநாதன்) நீதிமன்ற கடமைகளை நிறைவேற்றுவதில் வகுப்புவாதம் மற்றும் சாதி சார்புகளை வெளிப்படுத்துகிறார் என அவதூறான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது எங்களின் கவனத்துக்கு வந்தது.

இந்த மேல்முறையீடு வழக்கில் 3வது எதிர்மனுதாரரின் வழக்கறிஞர் எஸ்.வாஞ்சிநாதன் உள்ளார். இதனால் நீதிபதி மீது முறையற்ற குற்றச்சாட்டு கூறியதால் அவர் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. அதன்படி அவர் ஆஜரானார்.

அவரிடம் எங்களில் ஒருவர் (ஜி.ஆர்.எஸ்) தனது நீதித்துறை கடமைகளை நிறைவேற்றுவதில் சாதி சார்பை வெளிப்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து முன்வைக்கிறீர்களா? என நேரில் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு அவர் நேரடியாக பதிலளிக்காமல், மேல்முறையீடு வழக்கில் 3வது எதிர்மனுதாரருக்காக ஆஜராவதில் இருந்து விலகிவிட்டதாக தெரிவித்தார்.

இருப்பினும் மேல்முறையீட்டு மனுவிலிருந்து விலகுவதால், அவர் மீதான இந்த நடவடிக்கையை கைவிட முடியாது. வாஞ்சிநாதனின் நடத்தை வழக்கறிஞருக்கு களங்கம் கற்பிப்பது போல் இருப்பதாக கூறி அவரை இந்திய பார் கவுன்சில் இடைநீக்கம் செய்தது. பின்னர் அந்தஇடைநீக்கம் ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகும் அவர் தனது நடத்தையை மேம்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும், அவர் தனது வழிகளை மாற்றிக்கொள்ளவில்லை.

அவர் தொடர்ந்து நீதித்துறையை அவதூறாகப் பேசி வருகிறார். இது தொடர்பாக சமூக ஊடகங்களில் அவரது வீடியோக்களால் நிரம்பியுள்ளன. தீர்ப்புகளை விமர்சிப்பது ஒரு விஷயம், ஆனால் நீதிபதிகள் மீது அவதூறு பரப்புவது முற்றிலும் வேறு விஷயம். வாஞ்சிநாதனின் நடத்தை முதல் பார்வையில் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பாகும். அதனால் தான், இந்த மேல்முறையீட்டில் மூன்றாவது பிரதிவாதிக்கான வழக்கறிஞராக அவர் இனி இல்லை என்றாலும் அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கைவிட முடியாது.

இதையடுத்து எங்களில் ஒருவர் (ஜி.ஆர்.எஸ்,) தனது நீதித்துறை கடமைகளைச் செய்யும்போது சாதி ரீதியாக நடந்து கொள்கிறாரா என தொடர்ந்து கூறுகிறீர்களா? என்ற எங்கள் கேள்வியை நாங்கள் தொடர்ந்து எழுப்பினோம். இந்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

அதற்கு பதிலாக, இந்த கேள்விக்கு பதிலளிக்க எழுத்துப்பூர்வமாக உத்தரவிடுமாறு எங்களைக் கேட்டுக் கொண்டார். இதனால் எங்களில் ஒருவர் (ஜி.ஆர்.எஸ், ஜே) தனது நீதித்துறை கடமைகளைச் செய்யும்போது சாதி ரீதியாக நடந்து கொள்கிறாரா என தொடர்ந்து வலியுறுத்துகிறீர்களா? என்ற கேள்விக்கு வாஞ்சிநாதன்  இன்று பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது விசாரணைக்கு பிறகு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ராஜசேகர் அமர்வு இந்த இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதிக்கு அனுப்புகிறோம். அவர் உரிய நடவடிக்கை எடுப்பார் என நீதிபதிகள் G.R.சுவாமி நாதன், ராஜசேகர் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version