தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்மையில் நடைபெற்ற முருகன் மாநாடு முடிந்த கையோடு டெல்லி சென்றுள்ளார்.
அங்கு, விரைவில் நியமிக்கப்பட உள்ள மாநில நிர்வாகிகள் மற்றும் பிற அணி செயலாளர்களின் பட்டியலை டெல்லி தலைமை அலுவலகத்தில் வழங்கி ஆலோசனை பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணம், தமிழக பாஜகவின் அடுத்தகட்ட அமைப்புச் செயல்பாடுகள் மற்றும் நியமனங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.