Close Menu
    What's Hot

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    நெருங்கும் தேர்தல்!. 10, +2 பொதுத்தேர்வு தேதிகள் மாற்றமா? அன்பில் மகேஷ் விளக்கம்!

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»உலக நாடுகள் அளவில் போட்டியிடும் தமிழ்நாடு!. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!
    தமிழ்நாடு

    உலக நாடுகள் அளவில் போட்டியிடும் தமிழ்நாடு!. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

    Editor web3By Editor web3February 9, 2026Updated:February 9, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1881005 stalind
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உலக நாடுகளோடு போட்டி போடும் அளவிற்கு தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

    ராணிப்பேட்டை அருகே ரூ.9000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்ட டாடா கார் தொழிற்சாலையில் உற்பத்தி தொடங்கப்பட்டது. பனப்பாக்கத்தில் டாடா நிறுவனத்தின் ஜாகுவார், லேண்ட் ரோவர் சொகுசு கார்கள் உற்பத்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் சுமார் 5 ஆயிரம் பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டாடா நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை பார்வையிட்டார். இதையடுத்து டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் ரேஞ்ச் ரோவர் காரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓட்டி மகிழ்ந்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, கார் உற்பத்தி ஆலையில் உள்ள ரத்தன் டாடா சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

    இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழகத்துக்கு இன்று பொன்னான நாள். டாடா நிறுவனம் 9,000 கோடி முதலீட்டில் 5000பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டத்தை ராணிப்பேட்டைக்கு தந்ததற்காக தனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். டாடா நிறுவனத்திற்கும் தமிழ்நாட்டுக்கு ஆழமான உறவு உள்ளது.

    இந்தியாவின் மின் வானக உற்பத்தியின் தலைநகரம் தமிழ்நாடு. வளர்ந்து வரும் புதிய துறைகளில் நாம் சிறந்து செயல்பட வேண்டும். அனைத்து துறைகளில் பன்முகபடுத்தப்பட்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. ஏற்கனவே உள்ள துறைகளில் மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும். திராவிட மாடல் அரசின் செயல்பாடுகளை உலக அளவில் எடுத்து சொல்ல சில மாதங்களில் மாநாடு நடத்தப்பட உள்ளது.

    உலக நாடுகளோடு போட்டி போடும் அளவிற்கு தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துள்ளது. எந்த துறையில் டாடா நிறுவனம் முதலீடு செய்தாலும் அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். டாடா நிறுவனத்தின் புதிய தொழிற்சாலைகள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்களை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஜய்யை எந்த நாட்டுக்கு முதல்வராக்க போகிறார் செங்கோட்டையன்?. செல்லூர் ராஜூ விமர்சனம்!.
    Next Article IND VS PAK டி20 உலகக் கோப்பை!. “ஐசிசி முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்”! ராஜீவ் சுக்லா உறுதி!.
    Editor web3
    • Website

    Related Posts

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    February 16, 2026

    நெருங்கும் தேர்தல்!. 10, +2 பொதுத்தேர்வு தேதிகள் மாற்றமா? அன்பில் மகேஷ் விளக்கம்!

    February 16, 2026

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    February 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    நெருங்கும் தேர்தல்!. 10, +2 பொதுத்தேர்வு தேதிகள் மாற்றமா? அன்பில் மகேஷ் விளக்கம்!

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    உச்சத்தில் உட்கட்சி பூசல்!. மாணிக்கம் தாகூர் பெரிய ஆளா?. செல்வப்பெருந்தகை காட்டம்!

    10ம் வகுப்புத் தேர்வு எழுத மாட்டார் வைபவ் சூர்யவன்ஷி!. அவரது தந்தை சொன்ன தகவல்!.

    Trending Posts

    “இப்படியொரு அருவருப்பான கருத்தை எதிர்பார்க்கவில்லை”!. த்ரிஷா பரபரப்பு அறிக்கை!

    February 16, 2026

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    February 16, 2026

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    February 16, 2026

    நெருங்கும் தேர்தல்!. 10, +2 பொதுத்தேர்வு தேதிகள் மாற்றமா? அன்பில் மகேஷ் விளக்கம்!

    February 16, 2026

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    February 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.