தமிழக அரசின் திருமண நிதியுதவி திட்டத்தில் 5460 தங்க நாணயங்களை வாங்குவதற்கான கொள்முதல் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

தமிழக அரசின் சமூக நலத்துறையால் மகளிர் நலன் அடிப்படையில் திருமண உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண திட்டம், டாக்டர் தர்மாம்பாள் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டம், ஈவேரா மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதியுதவி திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவி திட்டம் உள்ளிட்டவைகள் செயல்படுத்தப்படுகிறது

இந்த நான்கு திட்டங்களிலும் பயனாளிகளுக்கு தகுதி அடிப்படையில் நிதி மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்கு ஒரு சவரன் அதாவது 22 காரட் மதிப்புள்ள 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் இந்த 4 திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு வழங்குவதற்காக 8 கிராம் எடையுள்ள 5,640 8 கிராம் தங்க நாணயங்களை  (22 காரட்) கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை தமிழக அரசின் சமூக நல ஆணையரகம் கோரியுள்ளது.

அதன்படி மொத்தம் ரூ.45 கோடி மதிப்பிலான தங்க நாணையங்களை கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version