கொரோனா காலத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளராக இருந்த டாக்டர் பீலா வெங்கடேசன் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான வெங்கடேசனுக்கும், சாத்தான்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ராணி வெங்கடேசனுக்கும் பிறந்தவர் பீலா வெங்கடேசன். சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று பட்டம் பெற்ற இவர் இந்திய குடிமைப்பணி தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ் ஆனார்.
பீகார், ஜார்கண்ட் மாநிலங்களில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிய இவர், செங்கல்பட்டு மாவட்டத்தின் துணை ஆட்சியராகவும், மீன்வளத்துறை இயக்குநராகவும் பணியாற்றி வந்தார். தொடர்ந்து 2020ம் ஆண்டு சுகாதார துறை செயலாளர் பதவியில் இருந்த இவர் பேரிடர் காலத்தில் சிறப்பாக செயல்பட்டு பாராட்டை பெற்றார்.
தற்போது தமிழக அரசின் எரிசக்தி துறை முதன்மை செயலாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பீலா வெங்கடேசன், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த அதிகாரிக்கு அரசு தரப்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.