Close Menu
    What's Hot

    ராணுவத்தையே வழிநடத்தும் பெண் தளபதி!. உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான ஆஸ்திரேலியா!

    அனல் காற்று வீசும்; 105 டிகிரியைத் தாண்டிய வெயில்!. ஏப்.17 வரை வீட்டுக்குள்ளேயே இருங்க!

    74 ஆண்டுகால காத்திருப்பு!. பீகாரின் முதல் பாஜக முதலமைச்சராகிறார் சாம்ராட் சௌத்ரி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»10 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு
    தமிழ்நாடு

    10 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு

    Editor TN TalksBy Editor TN TalksNovember 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rain
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் நாளை (நவ.21) தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக, வருகின்ற சனிக்கிழமை (நவ.22) வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, 24-ம் தேதி வாக்கில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 48 மணி நேரத்தில், மேற்கு – வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெறக்கூடும்.

    இதன் காரணமாக நாளை (நவ.21) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 22 முதல் 26-ம் தேதி வரை கடலோர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    தமிழகத்தில் நாளை (நவ.21) தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும், 22, 23 தேதிகளில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, கடலூர், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    24-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில்லும், 25-ம் தேதி புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலுமும், 26-ம் தேதி திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (நவ.21) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நவ.24-ம் தேதி சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

    தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக தென்காசி மாவட்டம் ஆயிக்குடியில் 15 செமீ, தென்காசியில் 13 செமீ, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், கன்னடயன் அணைக்கட்டில் தலா 11 செமீ, ஊத்து, நாலுமுக்கில் தலா 9 செமீ, காக்காச்சி, தென்காசி மாவட்டம் கருப்பாநதி அணையில் தலா 8 செமீ, செங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில் தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“இது என் பயணம் மட்டும் அல்ல” – ரெஜினா நெகிழ்ச்சி
    Next Article சட்டவிரோத குவாரி நடத்துவோர் மீது குற்றவியல் நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு
    Editor TN Talks

    Related Posts

    அனல் காற்று வீசும்; 105 டிகிரியைத் தாண்டிய வெயில்!. ஏப்.17 வரை வீட்டுக்குள்ளேயே இருங்க!

    April 14, 2026

    திருப்பூரில் தவெக பரப்புரையில் பரபரப்பு!. வேட்பாளர் உட்பட 15 பேர் மயக்கம்!. வார்னிங் கொடுத்த டிஎஸ்பி!.

    April 14, 2026

    “பழைய திமுகவை பார்க்க வேண்டியிருக்கும்”!. பிரதமர் மோடிக்கு கடைசி வார்னிங்!. முதல்வர் ஸ்டாலின்!

    April 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ராணுவத்தையே வழிநடத்தும் பெண் தளபதி!. உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான ஆஸ்திரேலியா!

    அனல் காற்று வீசும்; 105 டிகிரியைத் தாண்டிய வெயில்!. ஏப்.17 வரை வீட்டுக்குள்ளேயே இருங்க!

    74 ஆண்டுகால காத்திருப்பு!. பீகாரின் முதல் பாஜக முதலமைச்சராகிறார் சாம்ராட் சௌத்ரி!

    திருப்பூரில் தவெக பரப்புரையில் பரபரப்பு!. வேட்பாளர் உட்பட 15 பேர் மயக்கம்!. வார்னிங் கொடுத்த டிஎஸ்பி!.

    “பழைய திமுகவை பார்க்க வேண்டியிருக்கும்”!. பிரதமர் மோடிக்கு கடைசி வார்னிங்!. முதல்வர் ஸ்டாலின்!

    Trending Posts

    ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000, ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்!. பாஜக தேர்தல் அறிக்கை

    April 14, 2026

    ராணுவத்தையே வழிநடத்தும் பெண் தளபதி!. உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான ஆஸ்திரேலியா!

    April 14, 2026

    74 ஆண்டுகால காத்திருப்பு!. பீகாரின் முதல் பாஜக முதலமைச்சராகிறார் சாம்ராட் சௌத்ரி!

    April 14, 2026

    திருப்பூரில் தவெக பரப்புரையில் பரபரப்பு!. வேட்பாளர் உட்பட 15 பேர் மயக்கம்!. வார்னிங் கொடுத்த டிஎஸ்பி!.

    April 14, 2026

    “பழைய திமுகவை பார்க்க வேண்டியிருக்கும்”!. பிரதமர் மோடிக்கு கடைசி வார்னிங்!. முதல்வர் ஸ்டாலின்!

    April 14, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.