Close Menu
    What's Hot

    சார்ஜர்கள் ஏன் கருப்பு வெள்ளை நிறத்தில் மட்டும் இருக்கின்றன?. ஆச்சரிய தகவல்!.

    கிறிஸ்துமஸ் விழாவுக்கு யார் முதலில் செல்வது என்பதில் தான் திமுக – தவெக இடையே போட்டி!. அண்ணாமலை விமர்சனம்

    IND W vs SL W| ஒரு போட்டி, பல சாதனைகள்!. இந்திய மகளிர் அணியின் வரலாற்று  சிறப்புமிக்க திறமை!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஐயப்ப மாநாட்டில் முதலமைச்சர் கலந்து கொள்வதா? – தமிழிசை கேள்வி
    தமிழ்நாடு

    ஐயப்ப மாநாட்டில் முதலமைச்சர் கலந்து கொள்வதா? – தமிழிசை கேள்வி

    Editor TN TalksBy Editor TN TalksAugust 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tamilisai Soundararajan 54 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கேரளாவில் நடைபெறும் உலக ஐயப்ப மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளதையும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு இந்து கடவுள் ராமன் குறித்து பேசியதற்கும் கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

    கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், ‘முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழகத்தில் நடைபெறும் எந்தவித இந்துமத நிகழ்ச்சிகளுக்கும் செல்வதில்லை. ஆனால் கேரள முதல்வர் பினராய் விஜயன் அழைத்துள்ள உலக ஐயப்ப மாநாடு நிகழ்ச்சிக்கு செல்கிறார். இது எந்தவிதமான நம்பிக்கை என அவர்கள் கூற வேண்டும். இந்துமத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக முதல்வரின் செயல்கள் உள்ளன.

    இந்து மதத்தை தீவிரமாக பின்பற்றுபவர் என்கிற அடிப்படையில் விசிக வன்னியரசு ராமர் குறித்து பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன். சமூக நீதியையும் சமத்துவத்தையும் போற்றுவது கம்பராமாயணமும் ராமரும்தான். அதற்கு ராமாயணத்தில் உதாரணங்கள் உள்ளன. சமதர்மம் எனும் தர்மத்தை உடையவன் ராமன்.

    திமுக ஆட்சியில் நடைபெறும் ஆணவக் கொலைகளை தடுப்பதற்கும், ஆணவக் கொலைகளுக்கு எதிரான சிறப்பு சட்டம் இயற்றுவதற்கும், ஆணவக் கொலைகளுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடத்தாமல், இங்கு நடைபெறும் ஆணவக் கொலைகளுக்கு ராமனும் சனாதன தர்மமும் காரணம் என்கிறார் வன்னியரசு. இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    சட்டம் ஒழுங்கு மற்றும் அஜாக்கிரதை காரணமாகவே தமிழகத்தில் ஆணவக் கொலைகள் நடந்து வருகிறது. பிற மாநிலங்களில் ஆணவக் கொலைக்கு எதிராக சட்டங்கள் இருக்கும் போது தமிழகத்தில் ஏன் சிறப்பு சட்டம் கொண்டுவர முடியவில்லை. ஆணவக் கொலை தடுக்க ஸ்டாலினிடம் சென்று விசிக போராட்டம் நடத்த வேண்டும்.

    இந்த நேரத்தில் நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் ராமனை வணங்குபவர்களின் ஒரு ஓட்டு கூட அவர்களுக்கு செல்லக்கூடாது. மேலும் வன்னி அரசுக்கு பாஜக சார்பில் கம்பராமாயணம் புத்தகங்களை வழங்க உள்ளோம்.

    தமிழையும் தமிழர்களையும் போற்றுவது பாரதிய ஜனதா கட்சி தான். குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக ஒரு தமிழரை அறிவித்துள்ளது பாஜக தான். அதற்கு திமுக உள்ளிட்ட இந்தி கூட்டணி கட்சியினர் அவருக்கு ஆதரவு அளிக்க மறுக்கின்றனர். குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தமிழ் பற்று எனும் முகமூடியை ஸ்டாலின் தான் போட்டுக் கொண்டுள்ளார். தமிழ் முகமூடி அணிந்து கொண்டு சிபி ராதாகிருஷ்ணன் வருகிறார் என முதல்வர் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

    தமிழர்களின் பாதுகாவலர்கள் என கூறுபவர்கள் அவர்கள் ஏன் ஒரு தமிழரை குடியரசுத் துணைத் தலைவராக ஆதரிக்க மறுக்கின்றனர். மம்தாவின் எதிர்ப்புக்காக தமிழ் வேட்பாளரை தியாகம் செய்தது ஏன் என அவர்கள் தான் கூற வேண்டும்’ என தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை விவகாரம் – தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி மனு
    Next Article காலை உணவுத் திட்டம் – அமுதா ஐஏஎஸ் விளக்கம்
    Editor TN Talks

    Related Posts

    கிறிஸ்துமஸ் விழாவுக்கு யார் முதலில் செல்வது என்பதில் தான் திமுக – தவெக இடையே போட்டி!. அண்ணாமலை விமர்சனம்

    December 29, 2025

    தங்கம் விலை குறைவு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?. இன்றைய நிலவரம் இதோ!.

    December 29, 2025

    எஸ்.ஐ.ஆர். பணி: கணக்கெடுப்பு படிவத்தை சரியாக நிரப்பாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் பணி தொடக்கம்

    December 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சார்ஜர்கள் ஏன் கருப்பு வெள்ளை நிறத்தில் மட்டும் இருக்கின்றன?. ஆச்சரிய தகவல்!.

    கிறிஸ்துமஸ் விழாவுக்கு யார் முதலில் செல்வது என்பதில் தான் திமுக – தவெக இடையே போட்டி!. அண்ணாமலை விமர்சனம்

    IND W vs SL W| ஒரு போட்டி, பல சாதனைகள்!. இந்திய மகளிர் அணியின் வரலாற்று  சிறப்புமிக்க திறமை!.

    தங்கம் விலை குறைவு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?. இன்றைய நிலவரம் இதோ!.

    எஸ்.ஐ.ஆர். பணி: கணக்கெடுப்பு படிவத்தை சரியாக நிரப்பாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் பணி தொடக்கம்

    Trending Posts

    விரைவு ரயில்களின் நேர மாற்றம்: பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! உங்கள் பயண நேரம் மாறுமா?

    December 29, 2025

    இன்றைய ராசிபலன் 29.12.2025: இவர்களுக்கு நினைத்தது நிறைவேறும்

    December 29, 2025

    சார்ஜர்கள் ஏன் கருப்பு வெள்ளை நிறத்தில் மட்டும் இருக்கின்றன?. ஆச்சரிய தகவல்!.

    December 29, 2025

    கிறிஸ்துமஸ் விழாவுக்கு யார் முதலில் செல்வது என்பதில் தான் திமுக – தவெக இடையே போட்டி!. அண்ணாமலை விமர்சனம்

    December 29, 2025

    IND W vs SL W| ஒரு போட்டி, பல சாதனைகள்!. இந்திய மகளிர் அணியின் வரலாற்று  சிறப்புமிக்க திறமை!.

    December 29, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.