Close Menu
    What's Hot

    புகை ஓவியத்தில் பாரதிராஜாவுக்கு தீபாஞ்சலி  – கோவை கலைஞரின் வித்தியாச இரங்கல்

    உலகக் கோப்பை திருவிழா!. கால்பந்து வரலாற்றை ஆண்ட ‘மகுடங்கள்’ யார் யார்?. சாதனை வரலாறு இதோ!

    `இயக்குநர் இமயம்’ அப்பா பாரதிராஜாவுக்கு புகழ் வணக்கம்  – சீமான் அஞ்சலி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை விவகாரம் – தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி மனு
    தமிழ்நாடு

    சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை விவகாரம் – தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி மனு

    Editor TN TalksBy Editor TN TalksAugust 25, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    768 512 15610450 829 15610450 1655726281258
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பதிவை ரத்து செய்தது தொடர்பான உத்தரவை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    முறைகேடாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்பட்ட புகார்களின் அடிப்படையில் விசாரணை நடத்திய தமிழக அரசு, திருச்சி சிதார் மருத்துவமனை, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றுக்கான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆகஸ்ட் 10ஆம் தேதி செய்தி குறிப்பு வெளியிட்டிருந்தது.

    இந்த செய்தி குறிப்பை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்க கோரியும் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனுவில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு வழங்கப்பட்ட உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு அரசின் பரிசீலனையில் உள்ள நிலையில், உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என பத்திரிகை செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் தங்கள் தரப்பில் விளக்கம் அளிக்க எந்த அவகாசமும் வழங்காமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்மன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உரிமத்தை ரத்து செய்து ஏற்கனவே அரசு உத்தரவு பிறப்பித்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து, அரசு உத்தரவை சமர்ப்பிக்கும் படி உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
    Next Article ஐயப்ப மாநாட்டில் முதலமைச்சர் கலந்து கொள்வதா? – தமிழிசை கேள்வி
    Editor TN Talks

    Related Posts

    புகை ஓவியத்தில் பாரதிராஜாவுக்கு தீபாஞ்சலி  – கோவை கலைஞரின் வித்தியாச இரங்கல்

    June 10, 2026

    `இயக்குநர் இமயம்’ அப்பா பாரதிராஜாவுக்கு புகழ் வணக்கம்  – சீமான் அஞ்சலி

    June 10, 2026

    நிலுவையில் வழக்கு ; பரோல் வழங்க முடியுமா? – நீதிபதி அமர்வு விசாரணை தொடக்கம்

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    புகை ஓவியத்தில் பாரதிராஜாவுக்கு தீபாஞ்சலி  – கோவை கலைஞரின் வித்தியாச இரங்கல்

    உலகக் கோப்பை திருவிழா!. கால்பந்து வரலாற்றை ஆண்ட ‘மகுடங்கள்’ யார் யார்?. சாதனை வரலாறு இதோ!

    `இயக்குநர் இமயம்’ அப்பா பாரதிராஜாவுக்கு புகழ் வணக்கம்  – சீமான் அஞ்சலி

    ஐசிசி டெஸ்ட் தரவரிசை! முதலிடத்தை இழந்த ஜோ ரூட்!. NO.1 யார் தெரியுமா?. சுப்மன் கில் அசத்தல்!

    நிலுவையில் வழக்கு ; பரோல் வழங்க முடியுமா? – நீதிபதி அமர்வு விசாரணை தொடக்கம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.