Close Menu
    What's Hot

    நான் உயிரோடுதான் இருக்கிறேன்… மரணச் சான்றிதழோடு அலையும் இளைஞர்! இது மத்தியப் பிரதேச சோகம்!

    பாலியல் தொல்லை புகாரில் பிரபல தொழிலதிபர் பி.ஆர். சுந்தர் கைது!

    டிரம்ப் பயணித்த ஹெலிகாப்டருக்கு அருகே விமானப் பாதுகாப்பு நடைமுறையில் தவறு; அமெரிக்க அதிகாரிகள் விசாரணை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»நான் உயிரோடுதான் இருக்கிறேன்… மரணச் சான்றிதழோடு அலையும் இளைஞர்! இது மத்தியப் பிரதேச சோகம்!
    Featured

    நான் உயிரோடுதான் இருக்கிறேன்… மரணச் சான்றிதழோடு அலையும் இளைஞர்! இது மத்தியப் பிரதேச சோகம்!

    Editor TN TalksBy Editor TN TalksAugust 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    015 MP 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உத்தரப் பிரதேசத்தில், தந்தைக்கு பதிலாக உயிருடன் இருந்த மகனுக்கே மரணச் சான்றிதழ் வழங்கிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

    மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரி மாவட்டம் ரன்னவுட் நகராட்சி 14-வது வார்டைச் சேர்ந்த கில்டா ஆதிவாசி என்பவரின் தந்தை ஜிக்னா ஆதிவாசி, கடந்த 2022 அக்டோபர் 24 அன்று உயிரிழந்தார்.

    இதையடுத்து, 2023-ஆம் ஆண்டு தனது தந்தையின் மரணச் சான்றிதழ் பெற கில்டா நகராட்சியில் விண்ணப்பித்தார். ஆனால், படிப்பறிவு இல்லாததால் வழங்கப்பட்ட சான்றிதழை அவர் சரிபார்க்கவில்லை.

    பின்னர், தனது தந்தையின் நிலத்தை தனது பெயருக்கு மாற்றுவதற்காக வருவாய்த் துறையை அணுகியபோது, தந்தைக்கு பதிலாக கில்டா ஆதிவாசியே இறந்ததாக மரணச் சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

    நகராட்சியின் இந்த அலட்சியப் பதிவுப் பிழையால், ஆதார் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ தரவுத்தளங்களில் கில்டா “இறந்தவர்” என பதிவு செய்யப்பட்டார். இதனால் அவரது ரேசன் அட்டை செயலிழந்ததோடு, அரசின் நலத்திட்ட உதவிகள் நிறுத்தப்பட்டன. பரம்பரைச் சொத்து பெயர் மாற்றமும் முடங்கியது.

    இதன்காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக குடும்பம் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கிய நிலையில், “நான் உயிருடன் இருக்கிறேன்; ஆனால் என்னை உயிரோடு கொன்றுவிட்டார்கள்” மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கில்டா தனது வேதனையை வெளிப்படுத்தினார்.

    இதனைத் தொடர்ந்து,  “பாதிக்கப்பட்டவரின் புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. தரவு பதிவில் தவறு நடந்திருந்தால், அது உடனடியாகத் திருத்தப்பட்டு, அவருக்கான அனைத்து அரசு சேவைகளும் மீண்டும் வழங்கப்படும்” என்று ஷிவ்புரி மாவட்ட ஆட்சியர் அர்பித் வர்மா  உறுதியளித்தார்.

     

    Administrative Error Death Certificate Human Interest India News Madhya Pradesh
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாலியல் தொல்லை புகாரில் பிரபல தொழிலதிபர் பி.ஆர். சுந்தர் கைது!
    Editor TN Talks

    Related Posts

    பாலியல் தொல்லை புகாரில் பிரபல தொழிலதிபர் பி.ஆர். சுந்தர் கைது!

    August 6, 2026

    டிரம்ப் பயணித்த ஹெலிகாப்டருக்கு அருகே விமானப் பாதுகாப்பு நடைமுறையில் தவறு; அமெரிக்க அதிகாரிகள் விசாரணை

    August 6, 2026

    சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மைல்கல்.. மூலக்கடையை வந்தடைந்தது ‘நீலகிரி’..!!

    August 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நான் உயிரோடுதான் இருக்கிறேன்… மரணச் சான்றிதழோடு அலையும் இளைஞர்! இது மத்தியப் பிரதேச சோகம்!

    பாலியல் தொல்லை புகாரில் பிரபல தொழிலதிபர் பி.ஆர். சுந்தர் கைது!

    டிரம்ப் பயணித்த ஹெலிகாப்டருக்கு அருகே விமானப் பாதுகாப்பு நடைமுறையில் தவறு; அமெரிக்க அதிகாரிகள் விசாரணை

    சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மைல்கல்.. மூலக்கடையை வந்தடைந்தது ‘நீலகிரி’..!!

    “அமித் ஷா நேரடியாகப் பேசட்டும்!”: தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு 3 நிபந்தனைகளை விதித்த ராகுல் காந்தி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.