சென்னையில் பச்சை மற்றும் நீல வழித் தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. நாள்தோறும் மெட்ரோ ரயிலில் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். அடிக்கடி மெட்ரோ சேவையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், இன்றும் காலை பச்சை வழித்தடத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து செயின்ட் தாமஸ் மவுண்ட் வரை சுமார் 22 கிலோ மீட்டர் வரை பபச்சை வழித்தடம் நீள்கிறது. கோயம்பேடு, அசோக் நகர் இடையே தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. அதே நேரம் நீல வழித்தடமான விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலான வழித்தடத்தில் எவ்வித தடங்களும் இல்லை.
கிட்டத்தட்ட 40 நிமிடங்களாக ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சீரானதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. காலை 7.18 மணிக்கு ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு 7.58 மணிக்கு சீராகி, ரயில்கள் வழக்கம் போல் இயங்கத் தொடங்கியது. அலுவலக நேரம் தொடங்கும் முன்பு இந்த கோளாறு ஏற்பட்டதால், பயணிகளுக்கு பெரிதாக பாதிப்பு இல்லை எனக் கூறப்படுகிறது.