தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி குறித்து தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற (DISHA) கூட்டத்தைக் – கண்டித்து பாஜகவினர் கருப்பு கொடியுடன் சாலை மறியல் போராட்டம்

மத்திய அரசு திட்டங்களில் பல்வேறு முறைகேடு நடந்திருப்பதாகவும் அதனை முறையாக ஆய்வு செய்யாமல் கூட்டம் நடத்துவதாக குழுவின் தலைவரும் தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வனை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (DISHA) கூட்டம் இன்று நடைபெற்றது

இந்த கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு குழு தலைவரும் தேனி எம்.பி தங்க தமிழ்ச்செல்வன், தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங், மற்றும் மாவட்டத்தில் உள்ள துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்

இந்தக் கூட்டத்தில் தேனி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் அதன் செயல்பாடு குறித்தும் ஆலோசனை நடைபெற்றது

அப்போது இந்தக் கூட்டத்தை கண்டித்து தேனி மாவட்ட பாஜக தலைவர் ராஜபாண்டி தலைமையில் பாஜகவினர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து கூட்டம் நடைபெறும் இடத்தை முற்றுகையிட முயன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தேனி மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களில் பல்வேறு முறைகேடு நடைபெற்று வருகிறது இதனால் பொது மக்களுக்கு மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களில் பயன் கிடைப்பதில்லை என்றும் இது குறித்து இந்தக் குழுவின் தலைவரும் தேனி எம்.பியும் தங்க தமிழ்ச்செல்வன் முறையாக ஆய்வு செய்யாமலே கூட்டம் நடத்துவதாக கண்டனம் தெரிவித்து பாஜகவினர் கருப்பு கொடியுடன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்

இதனை அடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்ய முற்பட்ட போது தேனி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

அதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்

Share.
Leave A Reply

Exit mobile version