கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக, ராஜ்யசபா சீட் ஒதுக்காததால் கூட்டணியை விட்டு வெளியே வந்தது. நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை தேமுதிக இன்னும் அறிவிக்கவில்லை. வரும் 9-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தேமுதிக மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் கூட்டணி குறித்த முக்கிய முடிவை அறிவிப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஏற்கனவே கூறியிருந்தார்.
இந்த நிலையில், தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், சட்டமன்ற தேர்தலில் என்ன முடிவு எடுக்க போகிறோம் என்பதை மாவட்ட செயலாளர்களிடம் ஆலோசித்துளோம்.
ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களும் வரக்கூடிய தேர்தலில் நாம் என்ன முடிவெடுக்க வேண்டும் என கருத்துக்களை தெரிவிக்கலாம். தேமுதிக கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டணி குறித்து உங்களுடைய கருத்தை இங்குள்ள கருத்து பெட்டியில் தெரிவிக்கலாம்.
மாவட்ட செயலாளர்களின் கருத்தை பொறுத்து கூட்டணி அமையும். மாவட்ட செயலாளர்களின் கருத்து தான் ஒவ்வொரு மாவட்டத்தின் கருத்தாக இருக்கும் என்பதால் மாவட்ட செயலாளர்களின் கருத்தை கேட்டு கூட்டணி குறித்து முடிவு எடுக்க உள்ளோம்.
ராஜ்ய சபா சீட் ஏற்கனவே பேசப்பட்டது சொல்லப்பட்டது அது ஒரு புறம் இருக்கட்டும். நடப்பது சட்டமன்ற தேர்தல் என்பதால் எங்களுடைய கவனம் சட்டமன்ற தேர்தலை நோக்கிதான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
திமுக கொடுத்த வாக்குறுதியில் 50 சதவீதம் நிறைவேற்றி உள்ளார்கள் இன்னும் 50 சதவீதம் நிறைவேற்றவில்லை.சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது
தை பிறந்தால் வழி பிறக்கும் தை மாதம் பிறந்தவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் எல்லாம் நடைபெறும்
வரும் சட்டமன்றத் தேர்தல் மாறுபட்ட ஒரு தேர்தலாக இருக்கும் மக்கள் விரும்பிய ஒரு அணி நிச்சயம் வெற்றி பெறும்.கூட்டணி கட்சிகளும் மந்திரி சபையில் அங்கம் வகிக்க வாய்ப்பு உள்ளது. கூட்டணி மந்திரி சபைக்கு வரக்கூடிய தேர்தலில் அதிகம் வாய்ப்புள்ளது..
திமுக ஆட்சியை அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் இணைய வேண்டும் என்ற ஈ.பி.எஸ். அழைப்பு குறித்த கேள்விக்கு, எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் அப்படித்தான் சொல்வார்கள் அது எடப்பாடி பழனிசாமியின் கருத்து.யார் ஏற்றுக் கொள்கிறார்கள் யார் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்கான விடை கூட்டணி அமையும் போது மக்களுக்கு தெரியும்.
திமுகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு ? மாவட்ட செயலாளர்கள் அவர்களது கருத்தை சொல்லி உள்ளார்கள் மாவட்ட செயலாளர்களின் கருத்தை வைத்து மாநாட்டில் கூட்டணியை அறிவிப்போம் என பதிலளித்தார்
