Close Menu
    What's Hot

    திடீரென அதிகரிக்கும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கோவிட்-19 தொற்று!. பெங்களூருவில் எச்சரிக்கை!

    “சோஃபா வந்ததும் சிலர் சென்றுவிட்டார்கள்…” – உதயநிதி ஸ்டாலின்

    “மக்கள் அவரை வெறுப்பார்கள் என்று நினைத்தேன்”!. கமேனியின் இறுதி ஊர்வலத்தை பார்த்து டிரம்ப் அதிர்ச்சி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»“கூட்டணி இல்லாமல் தமிழகத்தில் யாரும் வெல்ல முடியாது” – மாணிக்கம் தாகூர்
    அரசியல்

    “கூட்டணி இல்லாமல் தமிழகத்தில் யாரும் வெல்ல முடியாது” – மாணிக்கம் தாகூர்

    Editor TN TalksBy Editor TN TalksJanuary 5, 2026Updated:January 5, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    manickam tagore
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கூட்டணி இல்லாமல் தமிழகத்தில் யாரும் வெல்ல முடியாது என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

    தமிகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி விவகாரங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. தமிழகத்தில் தேர்தல் களத்தில் விஜய்யின் தவெக புதிதாக இணைந்துள்ளாலும் கூட, அதற்கு மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பு காரணமாக அவரது இருப்பு திமுக, அதிமுக கூட்டணிக்கு சவாலாகப் பார்க்கப்படுகிறது.

    மேலும், விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளும் எந்தக் கட்சியும் கூட்டணிக்கு வரலாம் என்று நிபந்தனையை மட்டுமே தவெக வைத்துள்ளது. இங்கும், அங்கும் போய்ப் பார்த்துவிட்ட கட்சிகள் தவெகவில் கடைசி நேரத்தில் கூட ஐக்கியமாகலாம் என்ற கணிப்புகளும் நிலவுகின்றன.

    இந்தச் சூழலில், பல மாதங்களாகவே திமுக கூட்டணியில் சலசலப்பு நிலவுவதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவு ஒன்றை பகிர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், “தமிழ்நாட்டில் கூட்டணியே அரசியல் உண்மை. ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுக்கான வாக்கு ஆதரவு உள்ளது.

    இந்த தரவு காங்கிரஸ் மட்டுமல்ல, மற்ற கட்சிகளின் எண்ணிக்கைகளும் முழுமையாக பிரதிபலிக்கப்படவில்லை என நினைக்கிறேன். ஆனால் கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் வெல்ல முடியாது.

    அதே நேரம், இப்போது அதிகாரம் மட்டும் அல்ல – அதிகாரப் பகிர்வும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது தானே ! ” என்று குறிப்பிட்டுள்ளார்.

    Image

    ஏற்கெனவே, விசிக தலைவர் திருமாவளவன் ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்று பதிவிட்ட ட்வீட் ஒன்று மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியது. அதைவைத்து அரசியல் பகடைக் காய்கள் உருட்டப்பட அதற்கு திருமாவளவனே முற்றுப்புள்ளியும் வைத்தார்.

    ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்பது விசிகவின் கொள்கை. ஆனால், இப்போதைய பல்வேறு சூழல்களைப் பொருத்திப் பார்க்கையில் திமுக கூட்டணியில் விசிக இணக்கமாக இருக்கிறது என்றார்.

    இந்நிலையில், இப்போது காங்கிரஸ் தரப்பிலிருந்து அத்தகைய குரல் ஒன்று எழுந்துள்ளது. ஆளும் திமுக பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துள்ள நிலையில், “கூட்டணி இல்லாமல் தமிழகத்தில் யாரும் வெல்ல முடியாது” என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளது கவனம் பெறுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleராதாபுரம் அருகே வாக்குச்சாவடி முகாம்களை ஆய்வு செய்த EX எம்பி
    Next Article மா.செயலர்களின் கருத்தை பொறுத்து கூட்டணி அமையும்!. பிரேமலதா விஜயகாந்த்!.
    Editor TN Talks

    Related Posts

    “சோஃபா வந்ததும் சிலர் சென்றுவிட்டார்கள்…” – உதயநிதி ஸ்டாலின்

    July 5, 2026

    யாருமே இல்லாத மேடை… ஆப்சென்ட் எம்.எல்.ஏ-க்கள்… அப்செட் ஆகி திரும்பிய அமைச்சர்!

    July 5, 2026

    புரட்சித்தலைவியிடம் பாடம் பயின்றவர்கள்; தவெக வெற்றிக்காக உழைப்போம் – டாக்டர் சி.விஜயபாஸ்கர்

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திடீரென அதிகரிக்கும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கோவிட்-19 தொற்று!. பெங்களூருவில் எச்சரிக்கை!

    “சோஃபா வந்ததும் சிலர் சென்றுவிட்டார்கள்…” – உதயநிதி ஸ்டாலின்

    “மக்கள் அவரை வெறுப்பார்கள் என்று நினைத்தேன்”!. கமேனியின் இறுதி ஊர்வலத்தை பார்த்து டிரம்ப் அதிர்ச்சி!

    யாருமே இல்லாத மேடை… ஆப்சென்ட் எம்.எல்.ஏ-க்கள்… அப்செட் ஆகி திரும்பிய அமைச்சர்!

    முருகப்பெருமானை தவறாக சித்தரித்தால்..! ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு சீமான் எதிர்ப்பு..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.