Close Menu
    What's Hot

    தலைமைச் செயலர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு!. தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு கடிதம்!

    தமிழ்நாட்டில் தேர்தலை நிறுத்த வேண்டும்!. உச்ச நீதிமன்றத்தில் அவரச வழக்கு!

    ‘ஜனநாயகன்’ படத்தை லீக் செய்தது ஆதவ் அர்ஜுனாவா?. வினோஜ் பி.செல்வம் புதிய சர்ச்சை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஓசூர் ஏர்போர்ட் அமைக்கும் திட்டத்தை நிராகரித்தது மத்திய அரசு!. வெளியான தகவல்!.
    தமிழ்நாடு

    ஓசூர் ஏர்போர்ட் அமைக்கும் திட்டத்தை நிராகரித்தது மத்திய அரசு!. வெளியான தகவல்!.

    Editor web3By Editor web3January 18, 2026Updated:January 18, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    hosur airport
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான தமிழக அரசின் கோரிக்கையை பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தி இந்து செய்தி கூற்றுப்படி, கடந்த வாரம் அனுப்பப்பட்ட கடிதத்தில், இப்பகுதியில் உள்ள வான்வெளி இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்.ஏ.எல்) நிறுவனத்திற்கு தேவைப்படுவதால், தமிழக அரசின் கோரிக்கையை நிராகரிப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    பெங்களூரு அருகே இருக்கும் தொழில்துறை நகரமான ஓசூரில், சர்வதேச ஓசூர் விமான நிலையம் அமைப்பதற்கான முயற்சிகளை தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது. ஓசூர் சர்வதேச ஓசூர் விமான நிலையத்திற்கு தள அனுமதி கிடைத்தவுடன், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ – TIDCO) சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் கொள்கை அளவிலான அங்கீகாரத்தைப் பெறும்.

    இந்நிலையில், ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான தமிழக அரசின் கோரிக்கையை பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் நிராகரித்துள்ளது, இது ஒரு குறிப்பிடத்தக்க பின்னடைவாகக் கருதப்படுகிறது.

    ஓசூர் விமான நிலையம் அமைப்பதற்கு பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து முதன்மையான அனுமதி பெற வேண்டும். ஏனென்றால், இப்பகுதியின் வான்வெளி இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்.ஏ.எல்) கட்டுப்பாட்டில் உள்ளது.  “எச்.ஏ.எல்-க்கு இந்த வான்வெளி தேவைப்படுவதால் கோரிக்கையை நிராகரிப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் கடந்த வாரம் கடிதம் மூலம் தெரிவித்தது. இப்போது, அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து மாநில அரசு தனது வாய்ப்புகளை ஆய்வு செய்யத் தொடங்கும்” என்று ஒரு வட்டாரம் தெரிவித்ததாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம், விமான நிலையம் அமைக்கத் தேவையான வான்வெளி தளர்வுகளைக் கோரி தமிழக அரசு பாதுகாப்புத் துறை அமைச்சகத்திடம் விண்ணப்பித்தது, ஆனால், தமிழக அரசின் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நவம்பர் மாதம் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் விரிவான பதிலைச் சமர்ப்பித்தார். அதில், எச்.ஏ.எல்-ன் செயல்பாடுகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் ஓசூரில் விமான நிலையம் அமைப்பது எப்படிச் சாத்தியம் என்பதற்கான தரவுகளைச் சுட்டிக்காட்டியிருந்தார்.

    இது குறித்து தமிழக அரசு தரப்பில், “ஒரு விவாதம் கூட நடத்தப்படாமல் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது ஏமாற்றமளிக்கிறது. தமிழக அரசுக்கும் பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் இடையே ஒரு சந்திப்பு நடந்திருந்தால், அரசு தனது தரப்பு விளக்கத்தை அளிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும்” ஒரு வட்டாரம் கூறியதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

    இதற்கிடையில், விமான நிலையத்திற்கான தள அனுமதி கோரிக்கையை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு அரசு அனுப்பிய நிலையில், அவர்கள் ஒரு தாக்க ஆய்வு செய்யக் கோரியுள்ளனர். “முன்மொழியப்பட்டுள்ள ஓசூர் விமான நிலையம், தற்போதுள்ள பெங்களூரு அல்லது சேலம் விமான நிலையங்களின் ஏதேனும் ஒரு வகையில் பாதிக்குமா என்பதைக் காட்ட இந்த ஆய்வு கேட்கப்பட்டுள்ளது. இதை டிட்கோ மேற்கொண்டு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்” என்று அதே வட்டாரம் தெரிவித்தது.

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டத்தில், பேரிகை மற்றும் பாகலூர் இடையே சுமார் 2,300 ஏக்கர் பரப்பளவில், 3 கோடி பயணிகளைக் கையாளும் திறன் கொண்ட சர்வதேச விமான நிலையம் ஓசூரில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஓசூர் விமான நிலையத்திற்கு தள அனுமதி கிடைத்தவுடன், டிட்கோ சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் கொள்கை அளவிலான அனுமதியைக் கேட்கும்.

    பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கும் இடையே உள்ள தற்போதைய ஒப்பந்தத்தின்படி, பெங்களூரு விமான நிலையத்திலிருந்து 150 கி.மீ வான்வழித் தூரத்திற்குள் புதிய விமான நிலையம் அமைக்கத் தடை உள்ளது என்பது ஓசூர் விமான நிலையத்திற்கு இருக்கும் மற்றொரு பெரும் சவாலாகக் கருதப்படுகிறது.

    இந்த சூழலில்தான், ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான தமிழக அரசின் கோரிக்கையை பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் நிராகரித்துள்ளது, இது ஒரு குறிப்பிடத்தக்க பின்னடைவாகக் கருதப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleIND VS NZ 3வது ஒருநாள் போட்டி!. தொடரை வெல்லுமா இந்தியா?. 
    Next Article இன்று தமிழகம் வரும் பியூஷ் கோயல்!. பாஜகவுக்கு எத்தனை தொகுதி?. இறுதி முடிவா?
    Editor web3
    • Website

    Related Posts

    தலைமைச் செயலர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு!. தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு கடிதம்!

    April 11, 2026

    தமிழ்நாட்டில் தேர்தலை நிறுத்த வேண்டும்!. உச்ச நீதிமன்றத்தில் அவரச வழக்கு!

    April 11, 2026

    ‘ஜனநாயகன்’ படத்தை லீக் செய்தது ஆதவ் அர்ஜுனாவா?. வினோஜ் பி.செல்வம் புதிய சர்ச்சை!

    April 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தலைமைச் செயலர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு!. தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு கடிதம்!

    தமிழ்நாட்டில் தேர்தலை நிறுத்த வேண்டும்!. உச்ச நீதிமன்றத்தில் அவரச வழக்கு!

    ‘ஜனநாயகன்’ படத்தை லீக் செய்தது ஆதவ் அர்ஜுனாவா?. வினோஜ் பி.செல்வம் புதிய சர்ச்சை!

    டிஎன்பிஎஸ்சி குரூப்-4!. மூன்றாம் கட்டக் கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

    சென்னையில் பரபரப்பு!. நடிகர்கள் ரஜினி, தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!. 

    Trending Posts

    தலைமைச் செயலர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு!. தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு கடிதம்!

    April 11, 2026

    தமிழ்நாட்டில் தேர்தலை நிறுத்த வேண்டும்!. உச்ச நீதிமன்றத்தில் அவரச வழக்கு!

    April 11, 2026

    ‘ஜனநாயகன்’ படத்தை லீக் செய்தது ஆதவ் அர்ஜுனாவா?. வினோஜ் பி.செல்வம் புதிய சர்ச்சை!

    April 11, 2026

    டிஎன்பிஎஸ்சி குரூப்-4!. மூன்றாம் கட்டக் கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

    April 11, 2026

    சென்னையில் பரபரப்பு!. நடிகர்கள் ரஜினி, தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!. 

    April 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.