Close Menu
    What's Hot

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் ரூ.31.47 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம்!. முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். 

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»முற்றும் திமுக – தவெக மோதல்: கட்சியினரை விரட்டியது திமுகவினரா? மக்களா?
    தமிழ்நாடு

    முற்றும் திமுக – தவெக மோதல்: கட்சியினரை விரட்டியது திமுகவினரா? மக்களா?

    Editor web3By Editor web3February 11, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    dmk tvk clash
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுகவினருக்கும் தவெகவினருக்கும் இடையே நடந்த மோதலில் படுகாயமடைந்த தமிழக வெற்றிக்கழகத்தினரை அக்கட்சியின் நிர்வாகிகள் சந்திக்க கூட அனுமதி மறுப்பது பேசுபொருளாகியுள்ளது.

    சென்னை – பூக்கடை, இப்ராகிம் சாலை, அங்கப்பன் நாயக்கன் தெரு பகுதியில் மக்களிடம் தேர்தலுக்காக சர்வே எடுக்க சென்ற தமிழக வெற்றிக்கழகத்தினர் சுமார் 10 பேரை அப்பகுதியின் திமுக வட்டச் செயலாளர் கவியரசு என்பவர் தனது ஆதரவாளர்கள் சுமார் 30 பேரோடு சேர்ந்து போலீசார் முன்னிலையிலேயே தாக்கி விரட்டி அடித்த சம்பவம் தமிழகம் முழுக்க அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. இந்நிலையில் இச்சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவ்வாறு சிகிச்சை பெறும் கட்சியினரை சந்திக்க சென்ற மாநில நிர்வாகிகள் ராஜ்மோகன், லயோலா மணி உள்ளிட்டவர்களை அங்கிருந்த போலீசார் தடுத்துள்ளனர். தொடர்ந்து நீண்ட போராட்டத்திற்கு பிறகே பாதிக்கப்பட்டவர்களை நிர்வாகிகள் சந்திக்க சேர்ந்தது.

    இது தொடர்பாக தனது X பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள தவெக கொள்கை பரப்பு இணை செயலாளர் லயோலா மணி, “பாரிமுனைப் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது, ஆளும் கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் அராஜகத் தாக்குதலில், நான்கு மாதக் கர்ப்பிணி உள்பட நிர்வாகிகள் சிலர் படுகாயம் அடைந்துள்ளனர். நேற்றிரவு அவர்களை காண ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சென்றோம். உள்ளே விடுவதற்கு அனுமதிக்காமல் காக்க வைத்தனர். பின்னர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு பாதிக்கப்பட்ட நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினோம்.
    தோல்வி பயத்தால் அராஜக செயலில் ஈடுபடும் திமுகவினர் காட்டுமிராண்டி செயலுக்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

    மறுபுறம் இது குறித்து பேசியுள்ள அமைச்சர் சேகர்பாபு, “பொதுமக்களுக்கும் தமிழக வெற்றிக்கழகத்திற்கும் இடையே தான் மோதல் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அது குறித்து விசாரித்து செய்தி போடுங்கள்” என கூறியுள்ளார்.

    மொத்தத்தில் இந்த விவகாரம் திமுக – தவெக இடையிலான தேர்தல் யுத்தம் பற்றி தமிழகம் முழுக்க பேச வைத்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபரபரப்பாக தயாராகிவரும் திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு!
    Next Article கூட்டணி ஆட்சி இல்லையா?. கொந்தளித்த மாணிக்கம் தாகூர்!. முதல்வருக்கு பதிலடி!
    Editor web3
    • Website

    Related Posts

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    February 16, 2026

    ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் ரூ.31.47 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம்!. முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். 

    February 16, 2026

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    February 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் ரூ.31.47 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம்!. முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். 

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    நெருங்கும் தேர்தல்!. 10, +2 பொதுத்தேர்வு தேதிகள் மாற்றமா? அன்பில் மகேஷ் விளக்கம்!

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    Trending Posts

    “இப்படியொரு அருவருப்பான கருத்தை எதிர்பார்க்கவில்லை”!. த்ரிஷா பரபரப்பு அறிக்கை!

    February 16, 2026

    ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் ரூ.31.47 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம்!. முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். 

    February 16, 2026

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    February 16, 2026

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    February 16, 2026

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    February 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.