அரசியலில் களமிறங்கியுள்ள விஜய், தற்போது தென் மாவட்டங்களை குறிவைத்து மாநாடு நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் நோக்கி தவெகவின் விஜய் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக ரோடு ஷோ, மாநாடு என பல பிரச்சாரங்களை ஈர்த்த விஜய்க்கு கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது பெரும் அடியை கொடுத்தது. இதனால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தனர். அதன் பிறகு மாநாடுகள் நடத்த சற்று இடைவெளி விட்டிருந்த விஜய், கடந்த சில நாட்களுக்கு முன் புதுச்சேரியில் மாநாட்டை நடத்தினார்.
இதனை தொடர்ந்து நேற்று ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற மாநாட்டிலும் விஜய்க்கு ஆதரவுகள் கிடைத்தன. மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்தநிலையில் தற்போது தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் களப் பணிகளில் தீவிரம் காட்டி வரும் விஜய், இனிமேல் தென் மாவட்டங்களை குறிவைத்து மாநாடு நடத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, வடக்கு டெல்டா, மேஎற்கு மண்டலங்களில் கால் பதித்துள்ள விஜய், இன்னும் தென் மாவட்டங்களில் களமிறாங்கமல் இருப்பது விமர்சனத்திற்குள்ளானது. மதுரையில் மாநாடு நடத்தியதோடு, நிறுத்திவிட்டார். இதனால், வரும் நாள்களில் தென் மாவட்டங்களை குறிவைத்து விஜய்யின் சுற்றுப் பயணத்தை திட்டமிட தவெக முனைப்பு காட்ட உள்ளதாம். பொங்கலுக்கு பிறகு நெல்லை அல்லது தூத்துக்குடி மாவட்டங்களில் மக்கள் சந்திப்பை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
