தமிழர் திருநாளாம் பொங்கல் விழா 4 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா இன்று போகி பண்டிகையுடன் தொடங்கியது. நாளை (15.1.2026) தைப்பொங்கல், நாளை மறுநாள் (16.1.2026) மாட்டுப் பொங்கல், 17.1.2026 அன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாளில் வீடுகளில் பொங்கல் வைத்து வழிபடும் நேரம் குறித்து பார்ப்போம்.
காலை 6 மணிக்கு முன் சூரிய பொங்கல் வைப்பவர்கள் நேரம் பார்க்க தேவையில்லை. பிறகு வைப்பவர்கள் காலை 7.45 முதல் 8.45 மணி வரை, அல்லது 10.35 முதல் 1 மணி வரை பொங்கல் வைக்கலாம்.
மாட்டுப் பொங்கல் தினத்தில் படையிலிடும் பழக்கம் இருப்பவர்கள் காலை 9:10 மணி முதல் 10:20 வரை படையல் போடலாம் அல்லது 12:00 மணி முதல் 1:30 மணி வரை போடலாம். மாலையில் படையல் போடும் பழக்கம் இருப்பவர்கள் ஆறு மணிக்கு மேல் படையல் போடலாம். மாலையில் இடும் படையலுக்கு நேர கணக்கு கிடையாது.
மாட்டு பொங்கல் அன்று முதலில் மாடுகளை குளிப்பாட்டி அலங்கரித்து மாடுகளின் கழுத்தில் பூமாலையும், கரும்பு மாலையும் கட்டி அலங்கரித்து, பின் பொங்கல் வைத்து வழிபடலாம். மாடுகளுக்கு கண்டிப்பாக பொங்கல் நைவேத்தியம் வழங்க வேண்டும். அதில் சிறிதளவை குடும்ப உறுப்பினர்களும் சாப்பிட வேண்டும். அதன் மூலம் லட்சுமி கடாட்சம் பெருகும் என்பது ஐதீகம்.
