அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலாவுக்கு ஒருபோதும் இடமில்லை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்

சட்டமன்ற தேர்தலையொட்டி, கூட்டணி பங்கீடு தொடரபாக அதிமுகவும் பாஜகவும் பலகட்ட ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர். அந்தவகையில் பாமக கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், இன்னும் சிலரை கட்சியில் சேர்க்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒருப்பகுதியாக நேற்று அவசரமாக டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது ஓ.பி.எஸ். டிடிவி தினகரன் உள்ளிட்டோரை கூட்டணியில் சேர்க்க அமித்ஷா வலியுறுத்தியுள்ளார்.

இதையடுத்து, தமிழகம் திரும்ப டெல்லி விமான நிலையம் வந்த எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக கூட்டணியில் மீண்டும் இணைத்துக்கொள்வீர்களா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சில கட்சிகள் வரும். அதை வெளிப்படையாக சொல்ல முடியாது. சேரும்போது உங்களை அழைத்து சொல்வோம். ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் சேர வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.  இருப்பினும், அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரன் இடம் பெறுவார் என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார். 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version