அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் குடமுழுக்கு விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. கடற்கரையில் வீற்றிருக்கும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் குடமுழுக்கு, 15 ஆண்டுகள் ஆகியும் நடைபெறாமல் இருந்து வந்தது. பிறகு ரூ.300 கோடியில் மெகா திட்ட வளாக பணிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கானொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். கடந்த ஒரு வருடமாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கோயில் கோபுரங்கள் புதுப்பிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 1-ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு, நாள்தோறும் பலவிதமான பூஜைகளும், யாகங்களும் வளர்க்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து நாளை காலை குடமுழுக்கு நடைபெறுகிறது.

இந்த நிகழ்வில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கிற்காக தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க 3 தற்காலிகப் பேருந்துகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில் சாலைகளில் 20,000 பேருந்துகளை நிறுத்தும் செய்யும் அளவிற்கு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

குடமுழுக்கின் போது, புனித தீர்த்தத்தை டிரோன் மற்றும் ஸ்பிங்கர் மூலம் அனைத்து இடங்களுக்கும் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேப் போன்று பக்தர்களின் வசதிக்காக, எஇடி டிவிகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது. குடமுழுக்கு முடிந்து தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜையில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version