Close Menu
    What's Hot

    AI உச்சி மாநாட்டில் சட்டை அணியாமல் போராட்டம் நடத்திய காங்., இளைஞர்கள்!. டெல்லி போலீஸ் அதிரடி!

    அரசியலில் ‘ராதிகா’ எஃபெக்ட்!. OG தாய் கிழவி; யாருக்குப் பொருத்தம்? நிர்மலா VS சோனியா காந்தி!

    பழனிசாமிக்கு பாடம் புகட்டிய பிரேமலதா! நழுவவிட்ட அதிமுக.. தட்டித்தூக்கிய திமுக..! எப்படி?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிரான தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
    தமிழ்நாடு

    திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிரான தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

    Editor TN TalksBy Editor TN TalksDecember 4, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    mduu
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மதுரை திருப்பரங்குன்றம் தீபத்தூணில், தீபம் ஏற்றலாம் எனும் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்தது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தது.

    திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபமேற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்ட நிலையில், அதற்கு எதிராக மதுரை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. அப்போது, நீதிபதி சுவாமிநாதனின் உத்தரவால் சமூக நல்லிணக்கம் பாதிக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு தரப்பு வாதிட்டது.
    மேலும், காவல் துறைக்கு இணையாக சி.ஐ.எஸ்.எப். செயல்பட முடியாது என்றும் தமிழ்நாடு அரசு கூறியது. அதிகார வரம்பை மீறி தனி நீதிபதி சுவாமிநாதன் செயல்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்றும் அரசு தனது தரப்பு வாதத்தை முன்வைத்தது. தனிநீதிபதி சுவாமிநாதன் நேற்று நடந்த மோதல் காட்சிகளை பார்த்தாரா என தெரியவில்லை என்றும் அரசு தெரிவித்தது.
    பின்னர் வாதிட்ட தர்கா தரப்பினர், கோயில் நிர்வாகத்தை தவிர்த்துவிட்டு மனுதாரர் தீபம் ஏற்ற செல்வதை ஏற்க முடியாது என்று கூறினர்.மேலும், அது தீபத்தூண் இல்லை, வெளிச்சம் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட தூண் என்றும் தர்கா தரப்பு வாதிட்டது.
    இதேபோன்று, வழக்கத்தில் உள்ள நடைமுறைக்கு எதிராக நீதிபதி சுவாமிநாதனின் தீர்ப்பு இருப்பதாக அறநிலையத் துறை தெரிவித்தது.மேலும், 100 ஆண்டுகளாக தீபத்தூண் பயன்பாட்டில் இல்லை என்பதை நீதிபதி சுவாமிநாதனே ஏற்றுக்கொண்டார் என்றும் அறநிலையத்துறை சுட்டிக்காட்டியது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், மதுரை ஆட்சியரின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
    உள்நோக்கத்துடன் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளதாகவும்,  பாதுகாப்புக்காக சி.ஐ.எஸ்.எப்-ஐ அழைத்ததில் தவறு இல்லை என்றும் தெரிவித்தனர். தனி நீதிபதி சுவாமிநாதனின் உத்தரவை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அவரே விசாரிப்பார் எனத் தீர்ப்பளித்தனர்.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஒரு லட்சம் கோடி செலவில் சீனாவில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு மையம் !!!
    Next Article திருப்பரங்குன்றம் மலை முன் ஆர்ப்பாட்டம்.. நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா கைது!
    Editor TN Talks

    Related Posts

    பழனிசாமிக்கு பாடம் புகட்டிய பிரேமலதா! நழுவவிட்ட அதிமுக.. தட்டித்தூக்கிய திமுக..! எப்படி?

    February 20, 2026

    திமுகவுக்கு ஆதரவு கொடுத்த ஓபிஎஸ்!. ஸ்டாலினை சந்தித்தபின் பரபரப்பு பேட்டி!

    February 20, 2026

    விஜய்யை நோக்கி வரும் முன்னாள் அமைச்சர்கள்!. முட்டுக்கட்டை போடும் அதிமுக தலைமை?. செங்கோட்டையன் பகீர்!

    February 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    AI உச்சி மாநாட்டில் சட்டை அணியாமல் போராட்டம் நடத்திய காங்., இளைஞர்கள்!. டெல்லி போலீஸ் அதிரடி!

    அரசியலில் ‘ராதிகா’ எஃபெக்ட்!. OG தாய் கிழவி; யாருக்குப் பொருத்தம்? நிர்மலா VS சோனியா காந்தி!

    பழனிசாமிக்கு பாடம் புகட்டிய பிரேமலதா! நழுவவிட்ட அதிமுக.. தட்டித்தூக்கிய திமுக..! எப்படி?

    இந்தியா vs பாகிஸ்தான் போட்டி!. 163 மில்லியன் ரீச்!. புதிய சரித்திரம் படைத்த ஜியோஸ்டார்!

    ரூ.70,000 கோடி ஊழல்!. ஹைதராபாத் பிரியாணி உணவகங்களின் தரவுகளை அலசிய ஏஐ!.  அதிரும் இந்தியா!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.